செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு

Posted: 2014-02-28 05:45:44 | Last Updated: 2014-03-01 19:18:35
அணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு

அணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு

அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாகாணத்தில் அணு உலை கழிவுகளை சேமித்து வைக்கும் சுரங்கத்திலிருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சின் காரணமாக அங்கு பணியாற்றி வந்த 13 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் அதிகமான அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடாகவும், அவற்றை பயன்படுத்திய ஒரே நாடாகவும் திகழ்வது அமெரிக்காவாகும். அந்நாட்டின் நியூ மெக்சிக்கோ மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் அணு கழிவுகளை சேமித்து வைக்கும் வகையில் தரையில் பெரும் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் சேமித்து வைக்கப்படும் அணு கழிவுகளை பாதுகாப்பாக அழிக்கும் பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அணு கழிவுகளை சேமித்து வைக்கும் மேற்குறிப்பிட்ட சுரங்கத்திலிருந்து அணு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிப்பட்ட கதிர்வீச்சின் காரணமாக அங்கு பணியாற்றி வந்த 13 ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த அணு கசிவிகாரணமாக நியூ மெக்சிக்கோ மற்றும் அம்மாகாணத்தை சுற்றி வசிக்கும் மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டின் எரிசக்தி துறை புதனன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நியூ மெக்சிக்கோவில் தரையில் அரைமைல் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை சேமிப்பு சுரங்கத்தில் கடந்த வெள்ளியன்று அணு கசிவு ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் அந்த சுரங்க தளத்தில் எந்த ஊழியரும் இருக்கவில்லை. ஆனால், அப்போது மேற்தளத்தில் 139 ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட பரிசோதனையில் 13 ஊழியர்கள் அணு கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட சோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்பட உள்ளனர். அதேநேரம் இந்த அணு கதிர் கசிவின் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.