செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு

Posted: 2014-02-28 07:04:17 | Last Updated: 2014-03-01 19:18:47
ஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு

ஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனம் 'க்வாண்டஸ்'. இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 5 ஆயிரம் பேரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. க்வாண்டஸ் விமான நிறுவனத்திற்கு ஏற்கனவே கிடைத்து வந்த வருமானம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 200 கோடி ஆஸ்திரேலியன் டொலர் அளவிற்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் 6 மாதங்களில் மட்டும் 2 கோடியே 52 லட்சம் ஆஸ்திரேலியன் டொலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் "விமான நிறுவனம் எதிர்கொண்டு வரும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்ய முடிவு செய்திருக்கிறோம். அதன் படி சில கடுமையான முடிவுகளை எடுத்திருக்கிறோம். மேலும், ஊழியர்களின் வருமானத்தில் 36 சதவிகிதத்தை குறைப்பது என்றும் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜோய்க் தெரிவித்துள்ளார். இதற்கு ஆஸ்திரேலிய தொழிற்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இது மிகவும் கடுமையான முடிவு. இது நிர்வாக திறமையின்மையின் வெளிப்பாடே ஆகும்" என்று அது கூறியுள்ளது. க்வாண்டஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பீடு 2009ஆம் ஆண்டில் 3 ஆஸ்திரேலியன் டாலர் என்ற அளவில் இருந்து வந்தது. தற்போது அதன் மதிப்பு 1.8 ஆஸ்திரேலியன் டொலராக குறைந்திருக்கிறது.