செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

போய் வா… அம்பாஸடர்! (படங்கள் இணைப்பு)

Posted: 2014-05-27 03:55:39
போய் வா… அம்பாஸடர்! (படங்கள் இணைப்பு)

போய் வா… அம்பாஸடர்! (படங்கள் இணைப்பு)

உணர்ச்சிகளுக்கு இடமற்ற எந்திரமாக இருந்தாலும், அம்பாஸடர் கார்கள் இந்தியச் சாலைகளின் பிரிக்கமுடியாத பந்தமாக கடந்த 65 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. இதனால் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகவே அம்பாஸடர் கார்கள் மாறியிருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தக் கார்கள் இந்திய சமூகத்திலிருந்து விடைபெறும் நேரம் இது.

இந்தியாவின் முன்னோடி தொழிலதிபர்களில் ஒருவரான சி.கே.பிர்லாவுக்கு சொந்தமானது இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம், 1948ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் ஹுப்ளி மாவட்டத்தில் அம்பாஸடர் கார்களை முதன் முதலாக தயாரித்தது.

1980ஆம் ஆண்டு மலிவு விலையில் மாருதி கார்கள் தயாரிக்கப்பட்ட பிறகு மெல்ல, மெல்ல மவுசை இழந்த அம்பாஸடர் கார்கள் இந்தியச் சாலைகளில் காண்பதற்கு அரிய அரும் பொருளாக மாறிப்போனது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு அம்பாஸடர் கார்கள் வலம் வந்தாலும் கடந்த 2012-13ஆம் ஆண்டில் மொத்தம் 3 ஆயிரத்து 390 அம்பாஸடர் கார்கள் மட்டுமே விற்பனையாயின. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெறும் 709 கார்களே விற்பனையாகி உள்ளன.

இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் உலகின் தலைசிறந்த டாக்சி தொடர்பான நிகழ்ச்சியில், மற்ற தயாரிப்புகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் பெருமிதம் என்றழைக்கப்படும் அம்பாஸடர் கார் கடந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, தென்ஆபிரிக்கா, மெக்சிக்கோ, ரஷ்யா ஆகிய நாடுகளை சேர்ந்த கார்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உலகின் தலைசிறந்த டாக்சி என்ற இந்த அரிய பெருமையை அம்பாஸடர் கார் பெற்றது.

உலகின் தலைசிறந்த டாக்சியாக அம்பாசிடர் கார் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு ஆண்டுகூட ஆகாத நிலையில் தற்போது அம்பாஸடர் தற்போது முழுமையாக விடைபெறுகிறது.

இந்த கார் இந்திய அரசியல் பிரமுகர்கள் விரும்பும் வாகனமாக ஒரு காலத்தில் இருந்து வந்தது. இந்தியாவின் கார் என்றாலே அது அம்பாஸடர் என்ற அளவுக்கு புகழ்பெற்றிருந்தது. பராமரிப்பு செலவு குறைவானதாகவும், விபத்துக்களை சந்தித்தாலும் உயிரிழப்பு ஏற்படுத்தாத கார் என்பதாகவும் பெயர் பெற்றிருந்தது. ஆனால் தற்போது பல்வேறு வசதிகளுடன் சொகுசு கார்கள் வந்ததால் இதன் உற்பத்தி குறைந்துபோனது.

இந்நிலையில் இந்துஸ்தான் நிறுவனத்தில் கடன்கள் பெருகி வருவதாலும், அம்பாஸடர் காரை வாங்க ஆட்கள் குறைந்துள்ளதாலும் தற்போது அந்நிறுவனம் அம்பாஸடர் காரின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனால் கார் உற்பத்தியில் பணியாற்றி வந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊதியமின்றி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அம்பாஸடர் கார் உருவாக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை எந்தவொரு மாற்றம் இல்லாமல் இருப்பதும் உற்பத்தி குறைந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது. போய் வா… அம்பாஸடர்!