செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

4 ஆயிரம் கோடிக்கு முன்னணி ஊடக நிறுவனத்தை வாங்குகிறார் முகேஷ் அம்பானி!

Posted: 2014-05-31 05:24:56
4 ஆயிரம் கோடிக்கு முன்னணி ஊடக நிறுவனத்தை வாங்குகிறார் முகேஷ் அம்பானி!

4 ஆயிரம் கோடிக்கு முன்னணி ஊடக நிறுவனத்தை வாங்குகிறார் முகேஷ் அம்பானி!

இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 'நெட்வேர்க் 18' எனும் மிகப்பெரும் ஊடக நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறது. இதன் மூலம் சி.என்.என், ஐ.பி.என், ஐ.பி.என் 7, சி.என்.பி.சி-டிவி 18 லோக்மத் மற்றும் ஈ டிவியின் அனைத்துச் சனல்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனது பெருநிறுவன ஆதிக்கத்தை காட்டி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போதும் ரிலையன்ஸ் நிறுவனம் அதிக செல்வாக்குடன் இருந்தது. தற்போது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு வந்துள்ளது. இந்த ஆட்சியிலும் ரிலையன்ஸ் நிறுவனம் செல்வாக்குடன் உள்ளது. செல்போன், புடைவை, இயற்கை எரிவாயு என எல்லாத்துறைகளிலும் ரிலையன்ஸ் உள்ளது.

இந்த நிலையில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் 'நெட்வொர்க் 18' எனும் பெரிய ஊடக நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்குகிறது. இதன் மூலம் இந்தியாவில் பிரபலமாக உள்ள ரி.வி.சனல்கள் அதன் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.

'நெட்வொர்க்கின் 18'ன் நிறுவுநர் ராகவ் பாகல். அவர் அதன் ஆசிரியராகவும் உள்ளார். அந்த நிறுவனம் திரைப்படங்கள், மின்னணு வர்த்தகம், பத்திரிகைகள் மற்றும் மொபைல் தகவல்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. ரிலையன்ஸுக்கு கை மாற்றியதன் விளைவாக, அவருக்கு தனது நிறுவனத்துடன் உள்ள தொடர்பு வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. நிறுவனம் கைமாறியதால் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. தற்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என அந்நிறுவனத்தின் ஒரு ஊழியர் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் நிறுவனம், 'நெட் வொர்க் 18' 78 சதவீதப் பங்குகளை வாங்கப் பேரம் பேசி முடித்துவிட்டது. இன்டிபென்டண்ட் மீடியா டிரஸ்ட் என்ற பெயரில் இந்தத் தொலைக்காட்சிகளை ரிலையன்ஸ் வாங்குகிறது. இந்த நிறுவனம் 'டிவி 18' எனும் துணை நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளையும் பெறுகிறது.

இந்த நிலையில் ரிலையன்ஸின் இன்டிபென்டண்ட் மீடியா நிறுவனம் 'நெட்வொர்க் 18' மற்றும் 'டிவி 18'க்கான பொதுமக்கள் வாங்குவதற்கான பங்கு பத்திரங்களை வெளியிடுகிறது. செபியின் வழிகாட்டுதலின் பேரில் பங்குகள் வெளியிடப்படுகின்றன.

'நெட் வொர்க் 18'ஐ விலைக்கு வாங்குவதன் மூலம் ரிலையன்ஸின் 4ஜி வர்த்தகம் உச்ச நிலையை எட்டும். முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 1,700 கோடியை ராகவ் பாகலுக்கு கடனாக அளித்தது. 'நெட்வொர்க் 18' மற்றும் 'டிவி18'ன் பங்குகளின் உரிமைகளை ராகவ் பாகல் மீட்டெடுப்பதற்காக அந்த கடனை ரிலையன்ஸ் நிறுவனத்தின் இன்டிபென்டன்ட் மீடியா அளித்து இருந்தது. ராகவ் பாகலுக்கு அளித்த கடன் தொகை தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளாக மாறுகின்றன.

இதன்மூலம் முகேஷ் அம்பானி இந்திய ஊடகத்துறையில் ஏகபோக ஆட்சி செலுத்தும் நிலைக்கு வந்துவிடுவார் என்று ஊடக வட்டாரங்களில் பேசப்படுகிறது.