செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வோடோபோன் தரும் அதிர்ச்சித் தகவல்

Posted: 2014-06-09 06:16:41
வோடோபோன் தரும் அதிர்ச்சித் தகவல்

வோடோபோன் தரும் அதிர்ச்சித் தகவல்

இங்கிலாந்தைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயற்படும் வோடோபோன் நிறுவனம் கோடிக்கணக்கான மக்களுக்கு தொலைபேசி மற்றும் செல்போன் சேவையை அளித்து வருகிறது. இப்போது இந்தியா, அல்பேனியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், செக்குடியரசு, கொங்கோ, எகிப்து, பிஜி, பிரான்ஸ், ஜேர்மனி, கானா, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, கென்யா, லெஸ்தோ, மால்டா, மொசாம்பிக், நெதர்லாந்து, நியூஸிலாந்து, போர்ச்சுக்கல், கட்டார், ருமேனியா, தென் ஆபிரிக்கா, ஸ்பெயின், தான்சானியா, துருக்கி, இங்கிலாந்து ஆகிய 29 நாடுகளில் மக்களின் தொலைபேசி மற்றும் செல்போன் பேச்சுகளை அரசு உளவு நிறுவனங்களால் உளவு பார்க்கப்படுவதாக வோடோபோன் நிறுவனம் அதிர்ச்சி தகவலைவெளியிட்டு உள்ளது. இந்த நாடுகளில் செல்போன் பேச்சுகளை இடைமறித்து கேட்க அரசிடம் இருந்து சட்டப்படி எந்த கோரிக்கையும் வரவில்லை.

ஆனால் இந்த நாடுகளில் உள்ள உளவு நிறுவனங்கள் தங்கள் சொந்த தகவல்தொடர்பு மூலம் தொலைபேசி மற்றும் செல்போன் பேச்சுகளை இடைமறித்து ஒட்டுக்கேட்டு உளவு பார்த்து வருகின்றன. மேலும் 6 நாடுகள் உடனே தகவல் தொடர்பு விவரங்களை தரும்படி உத்தரவிட்டுள்ளன. ஆனால் தகவல்களை தர மறுத்தால் எங்களுக்கு பல வழிகளில் அந்த அரசுகள் இடையூறு செய்யும். அரசுகள் எங்களுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எங்கள் ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று வோடோபோன் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டச் சிக்கல்களை கருத்தில் கொண்டு அந்த நாடுகளின் விவரங்களை வோடோபோன் நிறுவனம் வெளியிடவில்லை. மக்களுக்கு நாங்கள் சிறந்த சேவை அளிக்க அரசுகள் வெளிப்படை தன்மையுடன், சட்டப்படி செயற்பட வேண்டும் என்று வோடோபோன் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உளவுத் தகவல்களை பெற அரசுகளின் மிரட்டலை தவிர்க்க அவ்வப்போது தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை மக்களுக்கு வெளியிடப் போவதாக வோடோபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸியில் கம்யூட்டர் நிபுணராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென், கடந்த ஆண்டு அமெரிக்காவின் உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி அமெரிக்க மக்களை மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் தலைவர்களின் தொலைபேசிப் பேச்சுகளையும் மக்களின் செல்போன் பேச்சுகளையும் உளவு பார்த்து வருவதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். ஓர் ஆண்டுக்கு பிறகு இப்போது வோடோபோன் நிறுவனம் அரசுகள் உளவு பார்ப்பதை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.