செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஒன்லைன் ஊக வணிகத்திற்கு தேவை தடை

Posted: 2014-06-13 06:29:50
ஒன்லைன் ஊக வணிகத்திற்கு தேவை தடை

ஒன்லைன் ஊக வணிகத்திற்கு தேவை தடை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் க.மோகன், பொருளாளர் வி.கோவிந்தராஜூலு, மண்டலத் தலைவர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில இணைச் செயலாளர் எம்.முகமது அபுபக்கர் ஆகியோர் மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என அறிவித்ததை நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும், வெளிநாட்டு நிறுவனங்கள் மொத்த வணிகத்திலும், மின் வணிகத்திலும் நுழைய எந்தவிதத்திலும் அனுமதி அளிக்கக்கூடாது.உலகத்தில் மிகப்பெரிய வணிகச் சந்தையாக விளங்கும் இந்தியாவில் உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் மத்திய அரசு தனித்துறையை ஏற்படுத்தி வணிகர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் தங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த, விவசாயிகளுக்கு அளிப்பதைபோல் 7 சதவிகித வட்டியில் கடன் வழங்கி சரியான முறையில் திருப்பி அளிப்பவர்களுக்கு 3 சதவிகித மானியம் அளித்து ஊக்குவிக்க வேண்டும். கோடிக்கணக்கான பண இழப்பை விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் ஏற்படுத்தும், விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் ஒன்லைன் ஊக வணிகத்திற்கு தடைவிதிக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிகாரிகள், விவசாயிகள், வணிகர்கள், பொருளாதார அறிஞர்கள் கொண்ட உயர்மட்டக் கமிட்டி அமைத்து 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்தி ஆலோசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அ ந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.