செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

சி.இ.ஒகளுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வு!

Posted: 2014-06-14 06:26:48
சி.இ.ஒகளுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வு!

சி.இ.ஒகளுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வு!

அமெரிக்காவில் உள்ள பொருளாதாரக் கொள்கைகளுக்கான நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதில் ஒவ்வொரு நிறுவனங்களிலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்திருக்கிறன. அதன்படி 1978ஆம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு 973 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களுக்கு வெறும் 10. 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு கிடைத்திருக்கிறது. 350 பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் கடந்த வருடம் தலைமை நிர்வாக அலுவலர்களுக்கு பல்வேறு இழப்பீட்டு தொகையாக ஒரு கோடியே 50 ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இது 2010ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 21.7 சதவீதம் உயர்ந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 1999இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்த ஒரு பகுதி அமெரிக்கர்கள் மட்டுமே மீண்டுள்ளனர்.

பெரும்பகுதியினர் கடும் நெருக்கடியிலேயே உள்ளனர். ஆனால் அதே நேரம் அமெரிக்கா நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு மற்றும் அதன் லாபம் மீண்டும் உயர்ந்து எழுச்சி பெற்று வருகிறது. அதே நேரம் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது. 1960 ஆம் ஆண்டிலேயே பணவீக்கத்திற்கு ஏற்பட குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் முறையை அமல்படுத்த அமெரிக்க மறுத்து விட்டது. இன்றைக்கு அமெரிக்க நிறுவனங்களில் இருக்கும் உற்பத்தித் திறனின் அடிப்படையில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 1303 ( 21.7 டொலர் ) ஆக இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு வெறும் ரூ. 435 ( 7.25 டொலர் ) ஆக இருக்கிறது. 2013ஆம் ஆண்டின் கணக்குப்படி வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையின் சராசரி அளவு என்பது தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது.

அதேநேரம் சி.இ.ஓ.க்களுக்கு அளிக்கப்படும் ஊதிய உயர்வு அதன் சந்தை மதிப்பில் எதிரொலிப்பதில்லை. ஆனாலும் தொடர்ந்து சி.இ.ஓக்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சி.இ.ஓ.க்களுக்கு சம்பளக் குறைப்பு செய்வதால் உற்பத்தித்திறன் எந்த வகையிலும் குறையாது. ஆனால் அதற்கு அமெரிக்கா கார்ப்பரேட் உலகம் அனுமதிப்பதில்லை. மாறாக ஏற்கனவே குறைந்த கூலியில் பணிபுரியும் தொழிலாளர்கள் தலையில் கைவைப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.