செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இயக்குநர் ராம நாராயணன் காலமானார்

Posted: 2014-06-22 21:58:48
இயக்குநர் ராம நாராயணன் காலமானார்

இயக்குநர் ராம நாராயணன் காலமானார்

திரைப்பட இயக்குநர் ராம நாராயணன் (வயது 66) சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம நாராயணன் இந்திய நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மரணமானார்.

காரைக்குடியைச் சேர்ந்த அவர் "சுமை' என்ற படத்தின் மூலம் இயக்குநராக களம் கண்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி, மலாய் உள்ளிட்ட மொழிகளில் 128 படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ளார். நாய், குரங்கு, பாம்பு உள்ளிட்ட விலங்குகளை வைத்து அவர் எடுத்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. கடந்த ஆண்டு வெளியான "ஆர்யா சூர்யா" திரைப்படம் இவர் இயக்கத்தில் வெளியான கடைசி படமாகும்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் 'ஆடி வெள்ளி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து விநியோகம் செய்துள்ளார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். காரைக்குடி தொகுதி தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவரது உடல் சிங்கப்பூரிலிருந்து இன்று திங்கட்கிழமை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.