செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தங்கம் இறக்குமதிக்கு தளர்த்தப்படும் கட்டுப்பாடு!

Posted: 2014-06-23 06:02:01
தங்கம் இறக்குமதிக்கு தளர்த்தப்படும் கட்டுப்பாடு!

தங்கம் இறக்குமதிக்கு தளர்த்தப்படும் கட்டுப்பாடு!

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி "பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன்களை கருதியே தங்கத்தின் மீதான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். இது பொருளாதார நிலைமைக்காகவோ, கொள்கைகளுக்காகவோ மட்டுமாக இருக்காது." என்றார். தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மோடி வழியாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்ததை விமர்சித்த எதிர்கட்சிகள் "தங்கத்தை கடத்துவதற்கு தான் வழிவகுக்கும்" என்று கூறின. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த ஆர்வமாக இருக்கிறார். தற்போது இந்தியாவில் தங்கத்தின் பற்றாக்குறை மிகவும் அதிகமாகிவிட்டது.

இந்தியாவுக்கான தங்கத்தின் தேவையும் அளிப்பும்

2012-13ஆம் ஆண்டில் தங்கம் இறக்குமதி இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு இருந்தது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தங்கம் இறக்குமதியின் மீது கட்டுப்பாடுகள் விதித்ததால் 2013-14ஆம் ஆண்டில் தங்கம் இறக்குமதி ரூ.20 ஆயிரம் கோடி அளவாக குறைந்தது. அதேசமயம் தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வருவது அதிகரித்து விட்டது. தங்கம் இறக்குமதி குறைந்துவரும் அதே வேளையில் தங்க நகைகள் ஏற்றுமதி கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தங்க நகைகளின் தேவை அதிகரித்துள்ளதால் மே மாதம் தங்க நகை ஏற்றுமதி 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி 11.41 சதவீதம் குறைந்துவிட்டது. உலகிலேயே இந்தியா தான் தங்கத்தை அதிகமாக வாங்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கைகளை ஏற்று மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிகிறது. இந்த தகவல் தங்க நகை வியாபாரிகளுக்கும், இதன் காரணமாக தங்கத்தின் விலை இன்னும் சரியும் என்று எதிர்பார்ப்பதால் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல மாத சம்பளதாரர்களின் வருமான வரி விலக்கு சலுகைக்கான உச்சவரம்பு தற்போது ரூ.2 லட்சமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்த உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. தற்போது உள்ள விலைவாசி மற்றும் பொருளாதார நிலைக்கு இந்த தொகை போதுமானதாக இல்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். சில கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. எனவே மத்திய பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் முதல்ரூ.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என்றும் தெரிகிறது.