செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இந்திய பொதுத்துறை பங்குகள் விற்பனை!

Posted: 2014-07-07 04:08:05
இந்திய பொதுத்துறை பங்குகள் விற்பனை!

இந்திய பொதுத்துறை பங்குகள் விற்பனை!

நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனதுமுதல் பட்ஜெட்டிலேயே அரசின் பொதுச் சொத்துக்களை தனியாருக்கு விற்று ரூ.70ஆயிரம் கோடி நிதியை திரட்டுவது என முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பலவீனமான நிலையிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை 'பலப்படுத்துவதற்காக' பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்திருப்பதாக காரணம் சொல்லப்படுகிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த நான்காண்டு காலத்தில் தனியாருக்கு விற்ற ப்சொத்துக்களின் அளவுக்கு இணையான சொத்துக்களை நடப்பு நிதியாண்டில் விற்பது என மோடி முடிவு செய்திருக்கிறது. மன்மோகன் தலைமையில் இயக்கிய கடந்துபோன காங்கிரஸ் அரசு தனது ஆட்சிக்காலம் முழுவதும் தனியாருக்கு தாரை வார்த்த பொதுத்துறை சொத்துக்களின் அளவு ரூ.56ஆயிரத்து 900 கோடி ஆகும்.

ஜூலை 10இல் தெரியும்

ஜூலை 10ஆம் திகதி இந்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்யவுள்ள பா.ஜ.க கூட்டணி அரசின் முதலாவது பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

"தனியாருக்கு விற்பனை செய்வதற்கான பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களின் விகிதம் குறித்து முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக மத்திய நிதியமைச்சகம் பல்வேறுஅமைச்சகங்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறது" என நிதியமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"இதுவே பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு சரியான தருணம்" என்று பட்ஜெட் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, அருண்ஜெட்லி பட்ஜெட்டில் அறிவிக்க உள்ள பொதுத்துறை பங்கு விற்பனையின் மதிப்பு ரூ.60ஆயிரம் கோடி முதல் ரூ.80ஆயிரம் கோடிவரை இருக்கக்கூடும் என பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உண்மைநிலை இன்னும் மூன்று நாட்களில் தெரிந்துவிடும்.