செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர்

Posted: 2014-07-11 05:00:45 | Last Updated: 2014-07-11 05:55:26
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாகஅதிகாரியாக பி.ஷி.உபேந்திர கமாத் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயற்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கே.பி.நாகேந்திர மூர்த்தி பணியாற்றி வந்தார்.

அவருடைய பதவிக்காலம் முடிந்தது. தற்போது புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உபேந்திர கமாத் தூத்துக்குடி வி.இ.ரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பதவியேற்றார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

விஜயா வங்கியில் 2011-2013ஆம் ஆண்டுகளில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், 2009-2011 ஆண்டுகளில் கனரா வங்கியில் நிர்வாக இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.