செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இந்தியாவுக்கு 4 கோடி யூரோ வருமானம்

Posted: 2014-07-11 05:04:43 | Last Updated: 2014-07-11 05:55:07
இந்தியாவுக்கு 4 கோடி யூரோ வருமானம்

இந்தியாவுக்கு 4 கோடி யூரோ வருமானம்

தோழமை நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்வெளியில் ஏவிவிட்டதன் மூலம் இந்தியாவுக்கு நான்கு கோடி யூரோக்கள் வருமானம் கிடைத்துள்ளது. உலகில் பிரிட்டிஷ் பவுண்ஸுகளுக்கு அடுத்ததாக அந்நியச் செலாவணி மதிப்பு கொண்டது யூரோ என்பது குறிப்பிடத்தக்கது.

2011ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தியா அந்நிய நாடுகளுக்காக 15 செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளது. இத்தகவலை இந்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திரா சிங் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்து மூலமான பதிலில் கூறியுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) 2011 முதல் 2014 வரையிலான நிதியாண்டுகளிலும், நடப்பு நிதியாண்டிலும் 15 அந்நிய செயற்கைக்கோள்களையும், 14 இந்திய செயற்கைக்கோள்களையும் அனுப்பியுள்ளது. அந்நிய நாடுகளின் செயற்கைக் கோள்களை அனுப்பியதன் மூலம் இந்தியாவுக்கு 3.982 கோடி யூரோக்கள் வருமானம் கிடைத்துள்ளன. அரசு விண்வெளித்துறை 2025ஆம் ஆண்டு வரையிலான எதிர்கால விண்வெளித் திட்டங்களை இறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் தம் பதிலில் கூறியுள்ளார்.

நவீனமயமான ஏவுதளம் மற்றும் கலங்களை மேம்படுத்தும் திட்டம், தலைப்பு ரீதியான பூமியைக் கண்காணிக்கும் திறன் கொண்ட கூடுதல் வண்ணம் தெளிவு கொண்ட, அதிகசக்தியுடைய, மிகவும் உயரிய தொழில் நுட்பம் கொண்ட தகவல்தொடர்பு செயற்கைக் கோள், நுண் அலை கொண்ட பல்வேறு ஸ்பெக்ட்ரல் தொலையுணர்வு செயற்கைக்கோள், வானிலை ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

2014 மார்ச் 31 வரை புதன் கிரகத்தை சுற்றி வரும் செயற்கைக் கோளுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.349.9 கோடிகளைச் செலவிட்டுள்ளது. இதற்கு ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.450 கோடி என்றும் அவர் கூறினார்.