செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி உதயம்: இந்தியா தலைமை தாங்கும்

Posted: 2014-07-17 01:17:28
பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி உதயம்: இந்தியா தலைமை தாங்கும்

பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி உதயம்: இந்தியா தலைமை தாங்கும்

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் புதிய வளர்ச்சி வங்கி உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்தியா இந்த வங்கிக்கு தலைமையேற்று நடத்தும். இதன் முதல் சி.இ.ஓவாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா , தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் ஆறாவது உச்சிமாநாடு போர்டலிசா நகரில் நடைபெற்றது. சில ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி தொடங்குவது குறித்து இந்த உச்சிமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. உலகவங்கி, சர்வதேச நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அமைப்புகளில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற நாடுகளின் ஆதிக்கம் உள்ளது. எனவே பிரிக்ஸ் நாடுகள் இணைந்து புதிய சர்வதேச வங்கியை துவக்குவது என்று 2013ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இந்தத் தீர்மானத்தை விரிவாக ஆலோசித்த பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் புதிய வளர்ச்சி வங்கியை துவக்குவது என முடிவுசெய்தனர். மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் உள்ள சர்வதேச வங்கிகளின் ஆதிக்கத்தை மாற்றியமைக்கும் வகையில் இந்தப் புதிய வங்கி அமையும் என தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். புதிய வங்கி 100 பில்லியன் அமெரிக்க டொலர் துவக்க முதலீட்டுடன் நிர்வகிக்கப்படும். ஆரம்ப உறுப்பினர் மூலதனம் 5ஆயிரம் கோடி அமெரிக்க டொலராகும். இதனை அனைத்து உறுப்பு நாடுகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும். வங்கியின் முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்தவராக இருப்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கியின் தலைமையகம் ஷாங்காயில் இருக்கும். ஆளுநர்கள் குழுவின் முதல் தலைவர் ரஷ்யாவைச் சேர்ந்தவராக இருப்பார். பிற வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான வளங்களை திரட்டுவது வங்கியின் நோக்கமாக இருக்கும்.

தீர்மானம்

பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போர்டலிசா பிரகடனத்தில் தத்துவார்த்த ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ மதரீதியாகவோ பயங்கரவாதத்தை எந்தவொரு நாடும் நியாயப்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் ஐ.நா.சபை பயங்கரவாதத்திற்கு எதிரான மையப்புள்ளியாக செயல்பட வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மோடி அறிக்கை

பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். இஸ்ரேல்-பாஸ்தீன மோதல் கவலையளிக்கிறது என்றும் மேற்காசிய நிலவரம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் 70 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் ஆப்கானிஸ்தானிற்கு உதவ வேண்டும் என்றும் சிரியாவில் அமைதி ஏற்பட இந்தியா உதவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.