செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஆம்வே அராஜகம்! எது நேரடி விற்பனை?

Posted: 2014-08-04 06:19:01
ஆம்வே அராஜகம்! எது நேரடி விற்பனை?

ஆம்வே அராஜகம்! எது நேரடி விற்பனை?

தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவைத் திறந்துவிட்டபிறகே இந்தியாவில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்தது. சில்லறை மற்றும் மொத்த விற்பனைச் சந்தையைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறிக்கொண்டு, பல பன்னாட்டு நிறுவங்கள் இந்தியர்களின் கடைசி ஒரு ரூபாயையும் உறிஞ்சிக் கொழுத்து வருகின்றன. அவற்றில் ஆம்வே நிறுவனமும்(Amway) என்று என்ற குற்றசாட்டு தற்போது தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வெடித்துக் கிளம்பியிருக்கிறது.

சிக்கிவிடாதீர்கள்!

இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இதுதான் வலைப்பின்னல்( MLM) சந்தையிடல் என்ற நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் "உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க!" என்றால் சக மனிதர்கள் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்கிறார்கள்.. அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவரையும், நடுத்தர குடும்பத்தை சார்ந்தவரையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவார்கள்.

ஆம்வே ஆட்கள் ஒருவரை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடுகிறார்கள். ஒன்று "இந்த தொழில் செய்தால் நீங்கள் செல்வந்தர் ஆகிவிடலாம்" என்பது. இரண்டாவது "நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று நம்ப வைப்பது. இப்படிப்பட்ட பகல் கொள்ளையை ஆம்வே சட்டப்பூர்வமாகவே செய்து வருகிறது என்கிறார் அனுபவப்பட்ட வாடிக்கையாளர்களும் தாய்மார்களும். ஆனால் அதே தாய்மார்களை பிடித்தே தனது பொருட்களை விற்று வருகிறது ஆம்வே. ஆனால் இதில் இறங்கிவிட்டு தங்கள் நட்பை, சொந்தங்களையும் விற்பனைக்காக துரத்த நேர்வதால் அவர்களை இழந்து தவிக்கிறார்கள் பலர். ஆம்வேயில் ஏன் சிக்கினோம் என்று இப்போது அதிலிருந்து வெளியேற முடியாத பல தாய்மாய்கள் குடும்பத்தையும் கவனிக்க முடியாமல், பிள்ளைகளுக்கும் சரிவர படிப்பு சொல்லிக் கொடுக்க முடியாமல் நிறுவனம் நிர்ணயித்த விற்பனை டார்கெட்டை எட்டுவதற்காக பைத்தியமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார். அடுத்த மாதம் ஒரு லட்சம் ஈட்டிவிடுவார் என்று ஆசை வார்த்தையை கட்டுகிறார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.

விலைகள் ஒரு ஒப்பீடு

இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.

இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய் (கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட). ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய் (விளம்பரதாரர், விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே) மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகளைப் பாருங்கள் டூத் பிரெஷ் - 19 ரூபாய், ஹேர் ஆயில் (500 ML) - 95 ரூபாய், சேவிங் க்ரீம்(70G) - 86 ரூபாய், ஆலீவ் ஆயில்(1 லிட்டர்) -400 ரூபாய், ஃபேஸ் வாஷ்-229 ரூபாய், புரொட்டீன் பவுடர்(1KG) - 2929 ரூபாய், மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா? இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(Direct sale)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.

இதுவா நேரர்டி விற்பனை?

நேரடி விற்பனை என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் நேரடி விற்பன. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?

உறுப்பினர் தொகை என்ற பெயரில் கொள்ளை ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்) பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும். எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான். இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.

இது பகல் கொள்ளையா இல்லையா? மக்கள் ஆம்வேயை கொள்ளை கும்பல் என்று வர்ணிப்பதன் பின்னணியில் இருக்கும் இந்தக் கணக்கை பாருங்கள்: நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய். நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் நிறுவன லாபம் 3000 ரூபாய்(6000-3000). இது 50 % தான் லாபம், கூடலாம் . ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய். இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்சம் ரூபாய் சம்பாதித்து விட்டார் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம். ஒருவர் ஒருலட்சம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)

100 x 995 = 99500 ரூபாய்

இந்த ஒருவர் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவருக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவருக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள். 3000 x 100 = 300000 ரூபாய் அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).

இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் கட்டணம் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு. இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவர் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறார் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவருக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவருக்கு கமிஷன் கிடையாது.

அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும். 300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக) 900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக) இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.

லட்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கௌரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.

நான் ஒருவனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம். இந்தப் பன்னாட்டுக் கொள்ளையில் தமிழர்கள் அதிக அளவில் தங்கள் பணத்தை இழந்து வருகிறார்கள்.