செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அமெரிக்க நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி அபராதம்

Posted: 2014-08-08 04:53:06
அமெரிக்க நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி அபராதம்

அமெரிக்க நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி அபராதம்

தென் அமெரிக்க நாடுகளில் ஈயம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முன்னணியில் இருந்து வருவது டோ ரன் நிறுவனம். ஐக்கிய அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் பெரு நாட்டு அரசுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி கடந்த 1922ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் லா ஒராயா நகரில் சுரங்கம் அமைத்து ஈயப் பொருள்களை மிகப்பெரும் அளவில் உற்பத்தி செய்து வருகிறது. மேலும், தாமிரம் உள்ளிட்ட உலோகப் பொருட்களையும் டோ ரன் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அதேநேரம், இந்நிறுவனம் சுற்றுச்சூழல் குறித்தான எத்தகைய விதிமுறைகளையும் பின்பற்றாமல் இயங்கி வருகின்றது. இதன்காரணமாக உலகில் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசடைந்த ஐந்து நகரங்களில் லா ஒராயா நகரமும் ஒன்றாக கூறப்படுகிறது.

மேலும், இந்நகரில் வசிக்கும் 6 மாத குழந்தைகள் முதல் 6 வயது வரை கொண்ட சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 97 சத வீதத்தினரின் ரத்தத்தில் டோ ரன் உற்பத்தி செய்யும் ஈயத்துகள்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதேபோல், 7 வயதிலிருந்து 12 வயது வரையிலான சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 98 சதவீதத்தினரின் ரத்தத்தில் மிக அதிக அளவிற்கு ஈயத் துகள்கள் கலந்திருந்தது தெரியவந்தது. மேலும், அந்நகரின் காற்று மற்றும் குடிநீரும் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டோ ரன் நிறுவனம் சுற்றுச்சூழல் குறித்தான எத்தகைய விதிமுறைகளையும் பின்பற்றவில்லை எனக்கூறி பெரு நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றாமல், பெரு நாட்டிற்கு நாசகேட்டை விளைவித்த டோ ரன் நிறுவனத்திற்கு சுமார் ரூ.1000 கோடி அபராதம் விதித்தது.