செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக அமெரிக்கர் நியமனம்!

Posted: 2014-08-23 05:34:37
இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக அமெரிக்கர் நியமனம்!

இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக அமெரிக்கர் நியமனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் என்பவரை மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுடில்லியில் வெள்ளியன்று மத்திய நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது:-

அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐஎம்எப் என்ற சர்வதேச நிதியமைப்பு பரிந்துரைத்தபடி முதலாவது நியமிக்கப்பட்டவர் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் ஆவர்.

இந்த நிலையில் அரவிந்த் சுப்பிரமணியன் ஐ.எம்.எப் 'கட்டளையுடன்' நியமிக்கப்படும் இரண்டாம் நபர் ஆவார். இவரது பெயர் அமைச்சரவையின் நியமனக் கமிட்டியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட் டுள்ளது.

முதன்மை பொருளாதார ஆலோசகரின் முதன்மைப் பணி அடுத்த ஆண்டு பெப்ரவரிக்கு முன்னதாகவும், பட்ஜெட் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாகவும் நாட்டின் பொருளாதார நிலை பகுப்பாய்வை மேற்கொள்வதும் பொருளாதார ஆய்வை வெளிக்கொண்டு வருவதும் ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.