செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

40,000 கோடி ரூபாயின் கதி என்ன?

Posted: 2014-08-23 05:38:10
40,000 கோடி ரூபாயின் கதி என்ன?

40,000 கோடி ரூபாயின் கதி என்ன?

இந்தியாவின் பூசன் ஸ்டீல் கம்பெனியின் ரூ.150 கோடி கடனை வராக் கடனாக மாற்றி எழுத 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி சிண்டிகேட் வங்கியின் சேர்மன் ஜெயின் மாட்டிக்கொண்டார். அந்த பூசன் ஸ்டீல் கம்பெனிக்கு ரூ.40,000 கோடி கடனை பஞ்சாப் நேசனல் பேங்க் உள்பட 51 வங்கிகள் கொடுத்திருக்கின்றன. அதுவெல்லாம் திரும்புமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே கடன் கொடுத்த நிறுவனங்களெல்லாம் ஒரு குழுவாக இணைந்து ஓர் தணிக்கைக்கு ஏற்பாடு செய்துள்ளன. பூசன் ஸ்டீல் நிறுவனத்தின் மூலதன தளத்தை விரிவாக்குமாறும் அவ்வங்கிகள் கூறியுள்ளன. இதற்கு கால அவகாசம் தருமாறு பூசன் ஸ்டீல் கேட்டுக்கொண்டுள்ளது. 'கடன்பட்டார் நெஞ்சங்களைவிட' இன்றையச் சூழலில் 'கடன் கொடுத்தார் நெஞ்சங்களே' அதிகம் கலங்கிப்போயுள்ளன.

254 கோடி இழப்பு

தமிழகத்தின் மின் பகிர்மானக் கழகம் ஜூலை 2009இலிருந்து ஓகஸ்ட் 2010 வரை ரிலையன்ஸ் எனர்ஜி டிரேடிங், பி.டி.சி இந்தியா, டாட்டா பவர் ஆகிய நிறுவனங்களிட மிருந்து வாங்கிய 158 கோடி யூனிட் மின்சாரத்தின் மூலம் ரூ.254 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியுள்ளார்.

கழிப்பறை அரசியல்

நரேந்திர மோடியின் சுதந்திர தின உரைக்குப் பின்னர் பள்ளிக் கூடங்களில் கழிப்பறை கட்டுவதற்கு தனியார் நிறுவனங்கள் போட்டி போடுகிற செய்திகள் வணிக ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதிலுமுள்ள 10,000 பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகளைக் கட்டப்போவதாக டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் அறிவித்துள்ளது.

லூதியானாவின் கிராமப்புறங்களில் கழிப்பறை இல்லாத வீடுகளோ, பள்ளிகளோ இல்லை என்ற நிலைமையை உருவாக்குவோம் என 'பாரதி' நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் தினம்தோறும் 60,000 ரயில் பெட்டிகளில் திறந்த வெளிக் கழிப்பறைகள் உள்ளன. 2 கோடி பேர் பயணம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.