செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பல்லிகளிடமிருந்து மரபணு தொழில்நுட்பம்!

Posted: 2014-08-28 03:21:43
பல்லிகளிடமிருந்து மரபணு தொழில்நுட்பம்!

பல்லிகளிடமிருந்து மரபணு தொழில்நுட்பம்!

ஒரு பச்சோந்தி சிக்கலில் மாட்டிக் கொண்டால் தன்னுடைய வாலை துண்டித்துக் கொண்டு தப்பியோடி விடும். பின்னர் அது ஒரு புதிய வாலை வளர்த்துக்கொள்ளும். இது வியப்பை மட்டும் தரவில்லை, பொறாமையையும் தோற்றுவிக்கிறது. உடைந்து போன அல்லது காணாமற்போன மனித அவயங்களை மீண்டும் வளர்ப்பது மறுஉற்பத்தி செய்வது ஸ்டெம்செல் மருத்துவத்தின் கனவாக இருந்து வருகிறது. தற்போது அறிவியலாளர்கள் பல்லியின் மறுவளர்ச்சி திறன் குறித்த மர்மத்தை உடைத்துள்ளனர். ஊர்வனவும், மனிதகுலமும் பகிர்ந்து கொள்ளும் மரபணுக்களில் இந்த மர்மம் பொதிந்து கிடக்கிறது. சாலமாண்டர் போன்ற மிருகங்களும், சில மீன்களும் இந்த மறுவளர்ச்சி திறமைகளைக் கொண்டவை. ஆனால் பச்சோந்திகள் இதை மாறுபட்ட வகையில் நடத்துகின்றன.

இதனுடைய திசு வளர்ச்சி வால் முழுவதும் சீராகப் பரவிக்கிடக்கிறது. மற்ற மிருகங்களில் அவற்றின் வால்களின் முனையில் மட்டும் இருக்கின்றன. தங்களோடு ஒட்டியுள்ள இணைப்புகளை மறுவளர்ச்சி செய்வதில் இவை மனிதனுக்கு மிக நெருக்கமான விலங்காகும். ஆய்வாளர்கள் நடுத்தர வளர்ச்சி கொண்ட ஐந்து பல்லிகளின் (பச்சோந்திகள் பல்லி வகையைச் சேர்ந்தவை) வால்களை அகற்றினர். அவற்றை ஐந்து துண்டுகளாக வெட்டினர்.

ஒவ்வொரு துண்டிலும் அவர்கள் மரபணு ஆராய்ச்சியை நடத்தினார்கள். மறுவளர்ச்சி காணும் குறிப்பிட்ட வால் பகுதிகளில் இவர்கள் 326 மரபணுக்களை குறிவைத்தனர். அவற்றில் 302 மரபணுக்கள் பாலூட்டிகளின் மரபணுக்களை ஒத்திருந்தன.

இந்த கண்டுபிடிப்பு 'பி.எல்.ஓ.எஸ். வன்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மனிதர்களும் பச்சோந்திகளும் ஒரே மரபணுக்களுடன் செயல்படுவதால், பச்சோந்திகளின் புதுமையான பாதையில் நடைபோட்டால் மனிதர்களிலும் மறுவளர்ச்சி சிகிச்சை சாத்தியம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்