செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

படிகக்கண்ணாடி வழியாக மின்சாரம் பாயுமா?

Posted: 2014-08-29 02:31:37
படிகக்கண்ணாடி வழியாக மின்சாரம் பாயுமா?

படிகக்கண்ணாடி வழியாக மின்சாரம் பாயுமா?

படிகக்கண்ணாடி (crystal class )ஒரு முழுமையான மின் தடுப்புப் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் வழியாக மின்சாரம் பாயாது. ஆனால் அல்ட்ரா ஷார்ட்லேசர் மின்துடிப்பு மூலம் இதன் மின்னணு குணங்களை மாற்றலாம் என்று அறிவியலாளர்களின் ஆய்வுகூறுகிறது. இந்த மாற்றம் மின் துடிப்பின் வலிமையைப் பொறுத்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மின்துடிப்பு வலுவாக இருந்தால், படிகக்கண்ணாடியின் அணுத்துகள் (எலக்ட்ரான்) சுயேச்சையாக கட்டுப்பாடின்றி நகரும். மாற்றப்பட்ட நிலையில் படிகக்கண்ணாடிக்குள் ஒளிபுக முடியாது என்பதுடன் அது மின்சாரத்தைக் கடத்துவதுடன், உலோகம் போல் செயற்படுகிறது.

ஒரு பொருளின் குணாம்சங்களை மாற்றும் தொழில்நுட்பம் வேகமாகி வருவதால் விரைவில் அல்ட்ரா பாஸ்ட் ஒளியை அடிப்படையாகக் கொண்ட மின்னணு பணிகள் தொடங்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது. கடந்த சில ஆண்டுகளாக அல்ட்ரா ஷார்ட் லேசர் மின்துடிப்பு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் ஆகியவற்றில் ஏற்படும் ஒட்டு மொத்த மாற்றங்களை ஆராயப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஜெர்மனியின் கார்ச்சிங்கில் உள்ள மாக்ஸ் - பிளாங் கல்விக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த சோதனையில் படிகக்கண்ணாடிகளில் மின்சாரம் செலுத்தப்பட்டது.

லேசர் மின் துடிப்பு மூலம் அதில் வெளிச்சமேற்படுத்தப்பட்டது. அச்சமயங்களில் கண்ணாடியின் குணம் உலோகம் போல் மாற்றம் அடைகிறது. லேசர் மின் துடிப்பு நிறுத்தப்பட்டவுடன் அதன் உண்மையான குணம் மீண்டும் திரும்புகிறது. லேசர் மின்துடிப்பு ஒரு மிகமிக வலுவான மின்களமாகும். படிகக்கண்ணாடியில் உள்ள மின்னணு நிலைகளை விறுவிறுப்பாக மாற்றும் சக்தி அதற்கு உண்டு என்று ஜப்பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.