செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பயமுறுத்தும் பங்கு விற்பனை ஆவி!

Posted: 2014-09-01 03:24:21
பயமுறுத்தும் பங்கு விற்பனை ஆவி!

பயமுறுத்தும் பங்கு விற்பனை ஆவி!

பழைய பங்கு விற்பனை ஊழல் ஒன்று மிகப்பழமையான ​ ​ஹோட்டலை முன்வைத்து இப்போது ஆவியாய்ச் சுற்றுகிறது. ராஜஸ்தான் உதய்பூர் பதெ ஏரியின் எதிரில் அமைந்துள்ள அரசின் சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமான லக்ஷ்மி விலாஸ் பேலஸ் ஹோட்டல் 2001-02 ஆம் ஆண்டில் அன்றைய பி.ஜே.பி ஆட்சியில் தில்லியில் பாரத் ஓட்டல் நடத்தி வரும் தொழிலதிபருக்கு விற்பனை செய்யப்பட்டது.

1911இல் மகாராணா பதெ சிங்கால் கட்டப்பட்டது. 29 ஏக்கர் நிலத்தில் 54 சொகுசு அறைகளோடு இருந்த இந்த ஓட்டலை இணைய தளத்தில் போய் பார்த்தால் அதன் பிரம்மாண்டம் தெரியும். இப்போது அங்கு உள்ள மகாராணா அறைக்கு ஒருநாள் வாடகை ரூ 65,000. மகாராணி அறை எனில் ரூ 45,000. இளவரசி அறை என்றால் ரூ 30,000. இருப்பதிலேயே சாதாரண அறைக்கு ரூ 6000. இப்போது அந்த ஓட்டல் பெயர் லலித் லக்ஷ்மி விலாஸ் பாலேஸ் என்பதாகும்.

12 ஆண்டுகளுக்கு பின்னர் அன்றைய மத்திய பங்கு விற்பனை அமைச்சகச் செயலாளர் ஆக அன்று இருந்த பிரதிப் பைஜால் மீது சி.பி.ஐ மேற்கண்ட பங்கு விற்பனையில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளது. அப்போது பங்கு விற்பனை அமைச்சர் அருண் சோரி. இந்த ஹோட்டலை விற்றதன் மூலம் எவ்வளவு அரசுக்கு இழப்பு என்று குற்றச்சாட்டு தெரியுமா! 7 கோடியே 52 லட்சம்.

ஆனால் அன்றைய சந்தை மதிப்பு ரூ.151 கோடிகளாம். சந்தை விலையில் 5 சதவீதத்திற்கு விற்றுள்ளார்கள். 95 சதவீதம் இழப்பு. எப்படிச் சூறையாடி இருக்கிறார்கள் பாருங்களேன்! இப்போது மோடி அரசு மீண்டும் பங்கு விற்பனையைத் தீவிரமாக்குவது பற்றி பேசி வருகிறது. இதுதான் பி.ஜே.பி யின் "குட் கவர்னன்சா" என்று வணிக வட்டாரங்களில் சிரிக்கிறார்கள்.