செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இனி செல்போனை தொலைக்க மாட்டீர்கள்!

Posted: 2014-09-01 03:29:29
இனி செல்போனை தொலைக்க மாட்டீர்கள்!

இனி செல்போனை தொலைக்க மாட்டீர்கள்!

மனையாள் இல்லாமல் வாழ்ந்தாலும் வாழ்வானே தவிர, மனிதன் இனி செல்போன் இல்லாமல் வாழமாட்டான். அந்த அளவுக்கு கைபேசி வழியாகவே அலுவலகம், குடும்பம் இரண்டையும் நிர்வகிக்கத் தொடங்கிவிட்டோம் நாம். செல்பேசிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவை காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது. மிகவும் அலசி ஆராய்ந்து அதிக பணத்தைப் போட்டு வாங்கும் செல்போன் தொலைந்து போகும்போது ஏற்படும் மன உளைச்சலை விவரிக்க முடியாது.

இனி உங்கள் செல்போன் தொலைந்துபோகும் என்று நீங்கள் எப்போது எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை. அமெரிக்காவின் ஒக்லஹோமாவைச் சேர்ந்த 'ஜோம்' என்ற புதிய நுகர்வோர் மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனம் இப்பிரச்சினையை ஏறக்குறைய முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. செல்போன் தொலையாமல் தடுக்கும் ஒரு சிறு உபகரணத்தை சமீபத்தில் லாஸ் வேகாசில் நடைபெற்ற சர்வதேச கர்வோர் மின்னணு சாதனக் கண்காட்சியில் 'ஜோம்' நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஒரு ரூபாய் நாணய அளவுக்கு இருக்கு இந்தச் சாதனம் செல்போன் தொலைவதைத் தடுக்கும் என்கிறார்கள் இவர்கள்.

இந்தக் கருவிக்கும் 'ஜோம்' என்றே பெயரிட்டிருக்கிறார்கள். இது 'புளூடூத்' மூலம் கேபிள் ஏதுமின்றி உங்களின் செல்போனுடன் இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் செல்போனை விட்டுச் சென்றால் இது ஒலியெழுப்பி உங்களை எச்சரிக்கும். மேலும் இது தனிப்பட்ட அலாரம் போலவும் செயல்படுகிறது. உரிமையாளர் அந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அவசர நேரங்களில் 'எமர்ஜென்சி'க்கு அழைப்பையும் அனுப்பும். அத்துடன் ஒரு 'ஸ்பீக்கர் போன்' போல செயல்படும் இது, 'இன்-கமிங் கால்கள்' குறித்து உரிமையாளரை 'அலர்ட்' செய்யும். ஒருமுறை 'சார்ஜ்' செய்தால் மூன்று நாள்களுக்கு நிற்கும் பட்டரியுடன் கூடிய இந்தச் சாதனம், இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே 3 ஆயிரத்து 600 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

'ஜோம்' நிறுவனத்தின் தலைவர் லாரி பெனிக்ஸுக்கு ஒரு தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த உபகரணத்துக்கான யோசனை பிறந்துள்ளது. பெனிக்சின் நண்பரின் மனைவி மூன்றாவது முறையாக செல்போனை தொலைத்துவிட்டார் என்று அறிந்தபோது, எத்தனை பேர் இதைப் போல அவதிப்படுவார்கள் என்று யோசித்து, அதைத் தடுப்பதற்கான கருவியை உருவாக்கத் தீர்மானித்தாராம் பெனிக்ஸ். அனுபவம் கண்ட தொழில்நுட்பம் என்பதால் கண்டிப்பாக இதற்கு வரவேற்பு இருக்கும் என்று நம்பலாம்.