செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வணிகம் சில வரிகளில்…

Posted: 2014-09-06 02:31:19
வணிகம் சில வரிகளில்…

வணிகம் சில வரிகளில்…

சிக்குமா சுறா மீன்கள்!

சிண்டிகேட் வங்கி தலைவர் கைதான பிறகு பெரும் தொழிலகங்கள் விதிகளை மீறி சுருட்டியுள்ள பெரும் கடன் தொகைகள் பற்றிய விவாதம் எழுந்துள்ளது. சிண்டிகேட் வங்கி கடன் ஊழலில் கைதான கணக்காய்வாளர் பவான் குமார் பன்சால் இன்னும் சில பொதுத்துறை வங்கி கடன் வழங்கலிலும் தலையிட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இப்போது பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யுனைடெட் கமர்சியல் பாங்க் (யூகோ வங்கி) ஆகிய வங்கிகளில் பன்சால் மூலம் கொடுத்த கடன்கள் குறித்த ஆவணங்களை சி.பி.ஐ துருவத் துவங்கியுள்ளது. வங்கி அதிகாரிகள், பன்சால் போன்ற இடைத்தரகர்கள் எல்லாம் சின்னச் சின்ன மீன்கள். பெரும் தொழிலதிபர்களே எல்லா ஊழல்களிலும் பலனாளிகளாக இருந்துள்ளனர். எனவே சுறா மீன்களைக் குறி வைக்காவிட்டால் கடைசியில் ஊழல் தப்பிவிடும்.

தலை எழுத்தா?

தேசிய மாதிரி சர்வே 2011-12 அறிக்கை அதிர்ச்சி தரத்தக்க உண்மைகளைப் பேசியுள்ளது. ஏற்கனவே 2013 இல் கிரெடிட் சூசே மற்றும் பொருளியல் நிபுணர்கள் நீல காந்த் மிஸ்ரா, ரவிகுமார் ஆகியோரின் ஆய்வின்படி இந்திய வாய்ப்புகளில் 84 சதவீதம் அமைப்பு சாராத் தொழிலாளர்களே உள்ளனர் என்றும் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம் இவர் களது பங்களிப்பே என்றும் கூறியிருந்தனர்.

என்.எஸ்.எஸ்.ஒவின் மேற்கூறிய சர்வேயும் இதே உண்மைகளை உறுதிசெய்துள்ளன. என்.எஸ்.எஸ்.ஒ ஆய்வின் படி 72 சதவீத உழைப்பாளிகள் அமைப்பு சாராத் தொழில்களில் உள்ளனர். அமைப்பு சாராத் தொழிலாளர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலைக்கான ஒப்பந்தம் எழுத்துப் பூர்வமாகக் கிடையாது.

நிரந்தர ஊழியர்களின் சம்பளத்தில் பாதிதான் கிடைக்கிறது. 70 சதவீதமானவர்களுக்கு லீவு எடுத்தால் சம்பளம் கிடையாது. 72 சதவீதமானவர்களுக்கு எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லை. 80 சதவீதமானவர்கள் எந்த சங்கத்திலும் உறுப்பினர்களாக இல்லை."தலை எழுத்து" என்றே இருக்கிறார்கள். மோடி அரசு இன்னும் தொழிலாளர் சட்டங்களை தளர்த்தினால் இவர்கள் நிலைமை என்ன ஆவது!

அதானி அதிரடி

அதானி ஆஸ்திரேலியாவின் கார்மிக்கேல் நிலக்கரி சுரங்கத்தின் ராயல்டி உரிமைகளை ரூ.870 கோடி ரூபாய் கொடுத்து லின்க் எனர்ஜி என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார்.

செட்டிநாட்டுச் சண்டை

இது அரச குடும்பத்துச் சண்டை. செட்டிநாடு சிமிண்ட் சேர்மன் எம்.ஏ.எம். ராமசாமி அந்த நிறுவனத்தின் இயக்குநரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வளர்ப்பு மகனுக்கும் அவருக்குமான சண்டையின் உச்ச கட்ட காட்சி இது.

பழைய கார் சந்தை

பழைய கார்களுக்குதான் மவுசாம். புதிய கார் சந்தையை விட பழைய கார் சந்தை பெரிதாகி விட்டது. இந்தியாவில் 2013-14 இல் பழைய கார் விற்பனை ரூ.70000 கோடி முதல் ரூ.80,000 கோடி வரை இருந்துள்ளது. புதிய கார் விற்பனை இதை விட 20 சதவீதம் குறைவாம்.

100 ரூபாய்க்கு விமானப் பயணம்

ஏர் - இந்தியா ரூ.100 அடிப்படைக் கட்டணத்தில் பயணம் என்று சலுகை விலை அறிவித்தவுடன் லட்சக் கணக்கானவர்கள் அதன் ஆன் லைன் புக்கிங்கை ஒரே நேரத்தில் அணுகியதால் அதன் சேவர் ஓகஸ்ட் 26 அன்று காலை ஸ்தம்பிதமடைந்தது. ஸ்பைஸ் ஜெட் இதே போன்ற சலுகையை 2013 ஜனவரியில் அறிவித்தபோதும் அதன் ஆன் லைன் புக்கிங் ஸ்தம்பிதமானது.