செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பூமியின் முடிவுக்கு நாள் குறித்த விஞ்ஞானி(வீடியோ)

Posted: 2014-09-08 07:39:23
பூமியின் முடிவுக்கு நாள் குறித்த விஞ்ஞானி(வீடியோ)

பூமியின் முடிவுக்கு நாள் குறித்த விஞ்ஞானி(வீடியோ)

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் பூமி முற்றாக அழிந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள் மூடநம்பிக்கைவாதிகள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இன்னும் இருநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் மனிதன் உட்பட எந்த உயிரினமும் இல்லாதொழிந்து போகும் என்று தெரியவந்துள்ளது. பூமியின் மிக மிக ஆழத்தில் உள்ள நீரில் நுண்ணுயிர்கள் மட்டுமே அப்போது இருக்குமாம்.

ஜேக்கின் கண்டுபிடிப்பு

ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தின் வான் உயிரியல் துறை ஆராய்ச்சியாளர் ஜேக் ஓ மலே ஜேம்ஸ் என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். தனது ஆராய்ச்சி முடிவை விரைவில் ஸ்கொட்லாந்து தேசிய வானியல் கூட்டத்தில் சமர்ப்பிக்கப் போகிறார். இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து சுற்றுச்சூழல் மாற்றங்கள் பல பெரிய உயிரினங்களை முற்றாக இல்லாதொழித்திருக்கிறது. ராட்சத டைனோசர்கள் காணாமல் போனதும் இப்படித்தான். இதே போன்ற மாற்றங்களால் இன்னும் 2.8 பில்லியன் ஆண்டுகளுக்குள் மனிதன் உள்ளிட்ட சகல உயிரினங்களும் திடீரென்றோ படிப்படியாகவே புவிப்பரப்பிலிருந்து இல்லாமல் போகும்.

இந்த அழிவுக்கு முதல் காரணியாக இருக்கப் போவது சூரியன்தானாம். இந்த உலகில் எல்லாம் அழிந்தாலும் சூரியன் மட்டுமே நிலையாக இருக்கும் என்றும், ஆனால் அது உமிழும் வெப்பத்தின் அளவு படிப்படியாக உயர்ந்து கடல்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் பாலைவனமாக்கிவிடும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. சூரியன் உமிழும் வெப்பத்தின் அளவு அடுத்த சில மில்லியன் ஆண்டுகளில் மிக அதிக அளவு இருக்கும் என்றும், நீர்நிலைகள் ஆவியாகும்போது, பூமியிலிருந்து அதிக கார்பன் டை ஒக்ஸைடைப் பெற்று, அதை மழை நீரோடு மீண்டும் பூமிக்கே திரும்பும். இதனால் தாவரங்கள் படிப்படியாக அழியத் தொடங்கிவிடும்.

சரியாக ஒரு பில்லியன் ஆண்டுகளில் கடல்கள் முற்றாக ஆவியாகி, உண்ண உணவும், குடிக்க நீரும், சுவாசிக்க காற்றும் இல்லாத சூனிய நிலை தோன்றும். அப்போது மனிதனோ விலங்குகளோ இயற்கை வளங்களோ இல்லாத சூழலில் எல்லாமே அழிந்து போகும் என்று இவரது ஆய்வு தெரிவிக்கிறது. விரிவாகத் தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்.