செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வேண்டுமென்றே கடன் கட்ட மறுப்பவர் யார்?

Posted: 2014-09-09 04:04:38
வேண்டுமென்றே கடன் கட்ட மறுப்பவர் யார்?

வேண்டுமென்றே கடன் கட்ட மறுப்பவர் யார்?

வேண்டுமென்றே கடன் கட்ட மறுப்பவர் யார்? யூனியன் பாங்க் ஆப் இந்தியா விஜய் மல்லையாவை "வேண்டுமென்றே கடன் கட்ட மறுப்பவர்" (WILFUL DEFAULTER) என்று அறிவித்துள்ளது. "விதி இருந்தும் கடன் கட்ட மறுப்பவர்" என்று அறிவிக்கப்பட்டால் அவரோ, அவரது நிறுவனங்களோ வங்கிகளிடம் கடன் வாங்க இயலாது. அவரது குழும நிறுவனங்களின் சேர்மன் பதவிகளிலிருந்து விலக வேண்டியும் வரலாம்.சிக்கலுக்கு ஆளாகியுள்ள மல்லையாவின் கிங் பிசர் "ஏர்லைன்" ஊழியர்களுக்கோ பல மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை. பலர் வேலைக்கு வராமல் நின்று விட்டாலும் சம்பள பாக்கிக்கு வழியில்லை. இப்படி அலைகிறவர்களின் எண்ணிக்கை 1000இற்கும் அதிகம். சேமிப்புகளும் கரைந்து போய், வயதின் காரணமாக வேறு வேலைகளுக்கும் போக முடியாமல் தவிக்கிறார்கள்.

ஊழியர்களெல்லாம் பாதுகாக்கப்படாத கடனாளர்கள் (UN SERURED CREADITORS) எல்லாம் கொடுத்தது போக மீதமிருந்தால்தான் இவர்களுக்கு கிடைக்கும் இப்படிப்பட்ட கடன்கள் மொத்தம் ரூ.1800 கோடி. பொதுத்துறை வங்கிகள் கொடுத்த ரூ.7500 கோடி "பாதுகாக்கப்பட்ட கடனாளர்" (Secured Creditors) பட்டியலில் வரும். ஆனால் அக்கடன்களுக்கும் மல்லையா 'பெப்பே' தான் காண்பிக்கிறார். இவ்வளவுக்கும் மத்தியில் செப்ரெம்பர் 2 அன்று அறிவிக்கப்பட்ட மத்திய வணிக அமைச்சகத்திற்கான நிலைக்குழுவில் விஜய் மல்லையாவுக்கு இடம் தரப்பட்டுள்ளது. மல்(லையா) யுத்தத்தில் காயம் அரசு வங்கிகளுக்கும், அப்பாவி ஊழியர்களுக்கும்தான்.

வேண்டுமென்றே கடன் கட்ட மறுப்பவர் யார்?

யாரை வங்கிகள் வேண்டுமென்றே கடன் கட்டமறுப்பவர் (WILFUL DEFAULTER என்று அறிவிக்க முடியும்)

1. பணத்தைக் கட்டுவதற்கான வசதிகள் இருந்தும் திரும்பச் செலுத்தாவிட்டால்.

2. எதற்காக கடன் வாங்கப்பட்டதோ அதற்காகப் பயன்படுத்தாமல் வேறு நோக்கங்களுக்காகத் திரும்பிவிட்டால்.

3. வருமானங்களை பொய்யாகக் காண்பித்தால்.

இப்படிப்பட்ட 'யோக்கியர்’ பட்டியலுக்கே இப்போது விஜய் மல்லையா வந்துள்ளார்.

வசூல் பண்ண முயற்சி இல்லையா?

வசூல் பண்ணுவதற்காக முயற்சித்தார்களா? இல்லை இன்னும் வாரி வழங்க வழி செய்தார்களா? என்பதே கேள்வி. 2011இலேயே இச்சிக்கல் வந்துவிட்டது. அப்போது பொதுத்துறை வங்கிகள் "கடன் சீரமைப்பு" என்ற பெயரால் 750 கோடி கடனை கிங் பிசர் ஏர்லைன்ஸின் பங்குகளாக மாற்றின. அப்போது ஒரு பங்கின் விலை ரூ.64.48. ஆனால் 2012இல் கிங் பிசர் ஏர்லைன்ஸ் இழுத்து மூடப்படுகிற நிலைமைக்கு வந்துவிட்டது.

தற்போது கிங் பிசர் ஏர்லைன்ஸின் பங்கு விலை ரூ.2.57இற்கு வந்துவிட்டது. அதாவது 2011இல் பங்குகளாக மாற்றப்பட்ட கடன் மதிப்பு ரூ.750 கோடி என்றால் இன்று அதன் மதிப்பு ரூ.30 கோடிகளுக்கும் கீழே உள்ளது. மறுசீரமைப்பு என்ற பெயரில் 700 கோடிகளுக்கு மேல் மக்களின் சேமிப்பு ஸ்வாகா. எனவே மல்யுத்தத்தில் சில நேரம் நடப்பது உண்மைச் சண்டையா! பொய்ச் சண்டையா! என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

இன்னுமா மௌனம்?

7000 கோடி வராக்கடனில் 17 வங்கிகளுக்கு பங்கு உண்டு. இதில் ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி ஆகியனவும் உண்டு. இப்போது யூனியன் பாங்க் ஆப் இந்தியா "வேண்டுமென்றே கடனைத் திருப்பிக் கட்டாதவர்' என்று மல்லையாவை அறிவித்து விட்டது. மற்ற வங்கிகளும் அறிவிக்குமா? எனப் பார்க்க வேண்டும். வங்கித்துறையின் மொத்த வராக்கடன் (GROSS NON PERORMING ASSETS) 4 சதவீதம் என்கிறார்கள்.

ஆனால் மல்லையாவுக்கு "மறு சீரமைப்பு" செய்யப்பட்டது போல செய்த கடன்களையும் சேர்த்தால் மொத்த வராக் கடன் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. மீறல்கள் அபாய எல்லைகளை தொடும் போது நம்பகத் தன்மைகளைத் தக்கவைக்க சில நாடகங்கள் அரங்கேறுமல்லவா? அதுதானோ இந்நடவடிக்கை என்று 'விவரமறிந்த' சிலர் சொல்கிறார்கள்.