செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கோப்புகளை Desktop இல் சேமிப்பது நல்லதல்ல! ஏன்?

Posted: 2014-09-10 02:03:52
கோப்புகளை Desktop இல் சேமிப்பது நல்லதல்ல! ஏன்?

கோப்புகளை Desktop இல் சேமிப்பது நல்லதல்ல! ஏன்?

எளிதாக திறக்கலாம் என்பதற்காக கணினியின் Desktop விண்டோவில் ஃபைல்களை பலரும் பதிவு செய்து வைக்கின்றனர். இது சரியான முறைதானா? என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அதற்குக் காரணம், Desktop என்பது கணினியைப் பொறுத்தவரை ஃபைல்களை எந்த விதத்திலும் பகுத்து பிரிக்கும் வசதியைப் பெறாத பகுதி என்பதே. மை டாக்குமென்ட் மற்றும் ட்ரைவ்கள் போல இப்பகுதி கணினியில் ஃபைல்கள் வைக்கும் பகுதியாக பகுக்கப்படவில்லை என்று சொல்லலாம். இதுவே முதல் காரணம். பகுக்கப்படாத பகுதியில் உள்ள ஃபைல்கள் கணினியில் நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. எனவே, இது பாதுகாப்பற்ற இடம் என்பதும் கூடுதலாக அறிந்து கொள்ளவேண்டிய செய்தியாகும்.

எப்படியென்றால், கணினியில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் சிக்கல் ஏற்பட்டு ஃபார்மேட் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டால், நீங்கள் Desktopஇல் பதிவுசெய்த அனைத்து ஃபைல்களையும் இழக்கவேண்டிய சூழல் ஏற்படும். கணினியில் உள்ள ஃபைல்களை தானாகவே பேக்அப் செய்து பாதுகாக்கும் மென்பொருள்களைப் பயன்படுத்தினாலும் அவற்றின் டீஃபால்ட் செட்டிங்கில் Desktop பேக்அப் அமைக்கப்பட்டிருக்காது.

அதனை நீங்கள்தான் அமைத்துக் கொள்ளவேண்டும். இதுமட்டுமல்லாது, டெஸ்க்டாப் இடம் முழுவதையும் ஆக்கிரமித்து ஃபைல்களை வைப்பதும் தவறாகும். டெஸ்க்டாப்பில் அதிகமான எண்ணிக்கையில் ஃபைல்கள் வைப்பதும், அதிகமான அளவு கொண்ட ஃபைலை பதிந்து வைப்பதும் கணினி வேகத்தைக் குறைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அவசரத்திற்கு பயன்படுத்த வேண்டுமென்றால் குறிப்பிட்ட ஃபோல்டருக்கோ அல்லது ஃபைலுக்கோ Desktop இல் ஷார்ட்கட் அமைத்துக் கொள்வதே நல்லது. அதுமட்டுமல்ல பெரும்பாலும் மென்பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பகுதியை சார்ந்தே Desktop பகுதியும் இருக்கிறது. அதனால் Desktop இல் சேமித்து வைக்கப்படும் கோப்புகள் அனைத்தும் மென்பொருட்கள் இருக்கும் கோலனில் சேர்வதால் அதில் இடப்பற்றாக்குறை ஏற்படும்.

இதனால் மென்பொருள்கள் ஓபன் ஆவதில் காலதாமதம் ஏற்படும். Desktop இல் இருக்கும் கோப்பில் பிரச்சினை ஏற்பட்டால் அது மென்பொருள்களையும் பாதிக்கும். ஆகவே அவசரத்திற்கு டெஸ்க்டாப்பில் சேமித்து வைத்தாலும் அதனை எடுத்து, கோப்புகளுக்கு என்று பிரித்து வைத்திருக்கும் மற்ற கோலன்களில் சேமித்து வைத்திடவேண்டும்.