செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

டொலரின் ஆதிக்கத்தை குறைக்க புதிய வர்த்தக ஒப்பந்தம் ரஷ்யா - சீனா இடையே கைச்சாத்து

Posted: 2014-09-11 03:40:01
டொலரின் ஆதிக்கத்தை குறைக்க  புதிய வர்த்தக ஒப்பந்தம் ரஷ்யா - சீனா இடையே கைச்சாத்து

டொலரின் ஆதிக்கத்தை குறைக்க புதிய வர்த்தக ஒப்பந்தம் ரஷ்யா - சீனா இடையே கைச்சாத்து

டொலரின் ஆதிக்கத்தை குறைத்திடும் வகையில் தங்களது சொந்த பணத்தை பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்ளும் வகையில் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

உக்ரைன் நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடியை காரணம் காட்டி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றனர். இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த பால், இறைச்சி மற்றும் விவசாய பொருள்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஷ்யா தடை விதித்தது. இதற்கு பதிலாக லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்ய ரஷ்யா முடிவு செய்தது.

இதேபோல், சீனாவுடன் சுமார் ரூ.24 லட்சம் கோடி (400 மில்லியன் டொலர்) மதிப்பிலான எரிவாயு விநியோக ஒப்பந்தத்தை ரஷ்யா மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கிடையே தற்போது மீண்டும் ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தக பரிமாற்றங்களின் போது அந்தந்த நாடுகளின் பணத்தையே இருதரப்பு பரிமாற்ற நாணயமாக பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் துணை பிரதமர் இகோர் சுவலாவ் மற்றும் சீன துணை பிரதமர் ஜாங் கோலி ஆகியோர் செவ்வாயன்று கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இவ்விரு நாடுகளின் நாணயங்களான ரஷ்யாவின் ரூபிள் மற்றும் சீனாவின் யென் ஆகியவை இருதரப்பினருக்கும் இடையேயான பரஸ்பர பரிமாற்ற நாணங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ரஷ்ய வங்கிகள், சீன வங்கிகளில் கணக்கை துவக்க முடியும். அதேபோல், சீன நிறுவனங்களிடமிருந்து ரஷ்ய நாட்டு நிறுவனங்கள் கடன்களை பெற முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இருதரப்பு ஒப்பந்தத்திற்கு பின்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது சீன துணை பிரதமர் ஜாங் கோலி தெரிவிக்கையில் -

இரு நாடுகளிலும் இயங்கி வரும் நிறுவனங்கள் பண பரிமாற்றங்கள் செய்திடும் போது உள்ளூர் நாணயங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த உள்ளோம். அதேநேரம், இவ்விரு நாடுகளின் நாணயங்களை தாண்டி மூன்றாம் உலக நாட்டின் நாணயத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல், சீன நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் கட்டுமானம், சாலை, கனிம வள மேம்பாடு மற்றும் வேளாண்மை உள்ளிட்ட 30இற்கும் மேற்பட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மூலம் ரஷ்யாவில் முதலீடு செய்ய விரும்புவதாக ரஷ்ய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.