செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஓசோன் கவசத்தை எப்படிப் பாதுகாக்கலாம்?

Posted: 2014-09-13 04:01:08
ஓசோன் கவசத்தை எப்படிப் பாதுகாக்கலாம்?

ஓசோன் கவசத்தை எப்படிப் பாதுகாக்கலாம்?

ஓசோன் அடுக்கு பற்றிய கவலையளிக்கும் செய்திகளே வந்துகொண்டிருந்த பின்னணியில், தற்போது சிறிது நம்பிக்கையூட்டும் செய்தியொன்று வந்துள்ளது. 'ஓசோன் ஓட்டை' என்று சித்தரிக்கப்பட்ட அரிமானத்தைச் சரிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பன்னாட்டு முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்பதே அது.

இயற்கைச் சமநிலை பாதுகாப்புக்காகப் போராடுகிறவர்களுக்கு இது நிச்சயமாக ஒரு சிறிய வெற்றியேயாகும். பூமியைச் சுற்றி அமைந்துள்ள ஒரு இயற்கைக் கவசம்தான் ஓசோன் அடுக்கு. வாயுக்களால் ஆன இந்த அடுக்கு இருப்பதால்தான் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் தடுக்கப்பட்டு, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கின்றன.

1970களில் பூமியில் ஏற்படத் தொடங்கிய பருவநிலை மாற்றங்கள், இயற்கைச் சீர்குலைவுகள், பயிர்களின் பாதிப்புகள், மனிதர்களையே கூட பாதித்த சில உடல் நோவுகள். இவற்றுக்கெல்லாம் இட்டுச்சென்றது அந்த ஓசோன் அடுக்கில் ஏற்பட்ட அரிப்புதான். ஆண்டுக்கு சுமார் 4 சதவீத வேகத்தில் அதிகரித்த இந்த அரிமானம் தொடர்ந்திருக்குமானால், 2030ஆம் ஆண்டுவாக்கில் உலகில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் கூடுதலாகத் தோல் புற்றுநோயின் பிடியில் சிக்குவார்கள் என்று ஐ.நா. குழு எச்சரித்திருந்தது.

இந்தப் பின்னணியில்தான், ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான போராட்ட இயக்கங்கள் பரவியதால் உலக நாடுகளிடையே பல்வேறு பேச்சுவார்த்தைகளும், ஐ.நா. அமைப்பின் சார்பில் பல்வேறு மாநாடுகளும் நடத்தப்பட்டன. அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய அரசுகள் முட்டுக்கட்டை போட முயன்றதையும் மீறி, 1987இல், கனடா நாட்டின் மோன்ட்ரீல் நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. ஓசோன் அடுக்கில் அரிமானத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருள் வாயுக்களை கட்டுப்படுத்துவதுதான் அந்த உடன்பாட்டின் மையக்கூறு.

அதனைச் செயல்படுத்துவது என்று வந்தபோது, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் தொழிற்சாலை செயல்பாடுகளுக்குத்தான் கூடுதலாக நெருக்கடிகள் தரப்பட்டன. மற்ற எல்லா நாடுகளையும் விட பலமடங்கு தீங்கான வாயுக்களை விண்ணில் செலுத்தி வந்த மேற்கத்திய வல்லரசுகள் அதைக் குறைப்பதற்கு ஒத்துழைக்க மறுத்து வந்தன. இவற்றையெல்லாம் மீறி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்கத் தொடங்கியிருப்பது முக்கியமானது.

இதனைக் கண்டறிந்துள்ள ஐ.நா. அறிவியல் குழுவினர், அதே நேரத்தில், மாற்றாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் களிலிருந்து வெளியேறும் வாயுக்கள் கலப்பதால், ஓசோன் அடுக்கில் ஏற்பட்டு வரும் இந்த ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் பலனை உலகம்இழக்க நேரிடலாம் என்றும் எச்சரிக்கிறார்கள். இப்போதும் கூட, 1980களில் இருந்ததைவிடவும் 6 சதவீதம் மெலிவாகவே ஓசோன் அடுக்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

முழுமையான பலன் கிடைப்பதில் அனைத்து நாடுகளுக்கும் பங்குண்டு என்றாலும், குறிப்பிட்ட வேதிப்பொருள்களை மிகுதியாகக் கையாளும் பெரிய நாடுகள்தான் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு பொறுப் பேற்கச் செய்வதற்காகவும் தொடர்ந்து போராடுகிறவர்களுக்கு ஓசோன் முன்னேற்றம் குறித்த செய்தி ஒரு ஊக்கப் பரிசுதான்.