செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

விருந்து தயாராகிவிட்டது

Posted: 2014-09-13 04:04:05
விருந்து தயாராகிவிட்டது

விருந்து தயாராகிவிட்டது

இது தனியார் நிறுவனங்களுக்கு அறுவடைக் காலம். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கான ஏற்பாடுகள் ஜோராக அரங்கேறி வருகின்றன. ஓ.என்.ஜிசி (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம்), இந்திய நிலக்கரிக் கழகம், தேசிய புனல் மின் கழகம் ஆகியவற்றின் பங்கு விற்பனை மூலம் 45,000 கோடி ரூபாய் திரட்டப்படுமென அரசு எதிர்பார்க்கிறது.

ஓ.என்.ஜி.சி யின் பங்குகள் நல்ல விலைக்கு போகுமென்று 'ப்ளூம்பெர்க்' நிறுவன ஆய்வின்படி 48 நிபுணர்களில் 38 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காரணம் மானியங்கள் குறைக்கப்படுமென்ற எதிர்பார்ப்புதானாம். பொதுத்துறை பங்கு விற்பனையும், சமூக நோக்கும் ஒன்றுக்கொன்று முரணானது என்பது தெளிவாகிறதா? தேசிய புனல் மின் கழகத்தின் பங்கு விற்பனை அவ்வளவு வெற்றியைத் தராது என் 'ப்ளூம்பெர்க்' ஆய்வு தெரிவிக்கிறது.

25 நிபுணர்களில் 9 பேரே பங்கு விற்பனை வெற்றி பெறுமென கூறியுள்ளார்களாம். காரணம் 2013-14இல் நிகர இலாபத்தில் 53 சதம் சரிவாம். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனை நன்றாக இருக்குமென 45 நிபுணர்களில் 29 பேர் தெரிவித்துள்ளனர். 'ப்ளூம்பெர்க்' ஆய்வுகளெல்லாம் நாட்டுக்கு நன்றாக இருக்குமா? மக்களுக்கு நன்றாக இருக்குமா? என்று ஆராய்ச்சி செய்வதில்லை என்பது தனிக்கதை.