செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

உண்மையாகிறது ஜூராசிக் பார்க்!

Posted: 2014-09-15 03:04:22
உண்மையாகிறது ஜூராசிக் பார்க்!

உண்மையாகிறது ஜூராசிக் பார்க்!

மீள் உருவாக்கம் என்று தமிழ்ச் சொல்லாக்கம் செய்யப்பட்டிருக்கும் குளோனிங் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புதைந்துபோன வரலாற்றைக் கூட உயிரியல் விஞ்ஞானிகள் தோண்டிக் கொண்டுவந்துவிடுவார்கள் போலிருக்கிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து உலகையே கலக்கிய ஜூராசிக் பார்க் படத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியுமா? அதில் விஞ்ஞானிகள் டைனோசரை சாகசமாக உருவாக்குவார்கள். கடைசியில் அது விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால் அதுபோல நிஜ வாழ்க்கையில் நடக்காது என நினைத்திருப்போம். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் ஒரு டைனோசர் குட்டியை உருவாக்கியிருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இதை உருவாக்கியுள்ளனர். இந்த டைனோசர் குட்டிக்கு ஸ்பெட் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தக் குட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. டைனோசரின் மரபணு தீக்கோழி ஒன்றின் கருவில் செலுத்தி விஞ்ஞானிகள் இதை உருவாக்கியுள்ளனர் என உயிரியல் பேராசிரியரான டொக்டர் ஜெரார்ட் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இது எங்குபோய் முடியுமோ!? நீங்கள் இங்கே படத்தில் பார்ப்பது ஸ்பெட் பொரித்ததும் எடுக்கப்பட்டு ஊடகங்களுக்குத் தரப்பட்ட ஒரேயொரு புகைப்படம்.