செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வால் நட்சத்திரத்தில் இறங்கும் ரோபோ

Posted: 2014-09-17 01:57:09
வால் நட்சத்திரத்தில் இறங்கும் ரோபோ

வால் நட்சத்திரத்தில் இறங்கும் ரோபோ

வால் நட்சத்திரம் ஒன்றில் மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று இறங்கும் இடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பை ஐரோப்பிய விண்வெளி முகாமை இந்த வாரத்தில் அறிவிக்கும். விண்வெளி ஆய்வு ரோபோ ரோசட்டாவின் ஒரு அங்கம் பிலே ஆகும். இது 100 கிலோ எடை கொண்டது.

இது அர்யுமோவ் - ஜெராசிமென் கோ என்ற வால்நட்சத்திரத்தில் நவம்பர் 11ஆம் திகதி இறங்கவுள்ளது. இந்த வால்நட்சத்திரத்தை ஆளில்லா விண்கலமான ரோசட்டா சுற்றி வருகிறது. ஓகஸ்ட் 6 முதல் ரோசட்டா இந்த வால் நட்சத்திரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஓகஸ்ட் 25 அன்று அறிவியலாளர்கள் பிலே இறங்குவதற்குச் சாத்தியமுள்ள ஐந்து இடங்களை அறிவித்தனர்.

இவர்கள் கடந்த மூன்று வாரங்களாக, இயங்கும் மற்றும் சுழலும் வியூகங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக ரோசட்டா குறிப்பிட்ட வால் நட்சத்திரத்துக்கு அருகில் 50 கிலோ மீற்றர் வரை சென்றது. ஒவ்வோர் இடம் குறித்தும் கூடுதல் விவரம் சேகரிக்கப்பட்டது. அவற்றை ஆய்வு செய்ததில் ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இது குறித்து ஐரோப்பிய விண்வெளி முகாமை திங்களன்று அறிவிக்கும், இதற்கான மாற்று இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் சந்திக்க நேரிடும் சவால் மற்றும் அறிவியல் விவரங்களும் தெரிவிக்கப்படும்.