செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

நியூயோர்க் பங்குச்சந்தையை மிரளவைக்கும் பங்குகள்!

Posted: 2014-09-23 02:59:39
நியூயோர்க் பங்குச்சந்தையை மிரளவைக்கும் பங்குகள்!

நியூயோர்க் பங்குச்சந்தையை மிரளவைக்கும் பங்குகள்!

உலகம் முழுவதும் இணையம் வழியாக பொருள்களை வாங்குவதும், கட்டணங்களைச் செலுத்துவதும், பங்குச்சந்தை மற்றும் மணி மார்க்கெட் எனப்படும் பணச்சந்தையில் முதலீடு செய்வதும் ஒன்லைன் வர்த்தகமாக மாறி விட்டன. சர்வதேச அளவில் ஓன்லைன் வர்த்தகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக பிரமாண்டமாக வளர்ந்துள்ளதால், உலக அளவில் பிரபல பிராண்டுகளை தயாரிக்கும் நிறுவனங்கள், ஒன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன் இணைப்பு வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றன.

இந்த வகையில், ஒன்லைன் வர்த்தகத்தை பெரும் அளவில் கைப்பற்றியுள்ளது அலிபாபா நிறுவனம். சீனாவில் இருந்து செயல்படும் இந்த அலிபாபா நிறுவனத்தின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள தொழில், வர்த்தக நிறுவனங்களுடன் அலிபாபா நிறுவனம் தொடர்பு வைத்துக்கொண்டு, பெரும் அளவில் பொருள்களை சந்தைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயோர்க் பங்கு சந்தையில் கடந்த ஒருவார காலமாகவே அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் விலை உயர்வுடன் விற்பனைக்கு வந்தது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 68 டொலராக பங்கு விற்பனை நிலையங்களில் முன் வைக்கப்பட்டது. இந்த மதிப்பில் ஒரு பங்கின் விலை கிட்டத்தட்ட 4 ஆயிரம் ரூபாய்க்கு சமம் ஆகும். ஆனாலும், சீனாவின் ஒன்லைன் விற்பனையில் 80 சதவீத விற்பனையை அலிபாபா நிறுவனம் கைவசம் வைத்துள்ளதுடன், ஆண்டுக்கு 167 பில்லியன் டொலர்அளவுக்கு விற்பனையை கையாள்வதால், இந்த நிறுவனத்தின் பங்குகள் வந்ததும் தெரியவில்லை, விற்பனையான வேகமும் தெரியவில்லை.

அலிபாபா நிறுவனத்தில் அமெரிக்காவின் யாகூ நிறுவனமும், ஜப்பானின் சாப்ட் பேங்க் நிறுவனம் பங்குதாரர்களாக உள்ளன. பங்குகள் வெளியீடு மூலம் 25 பில்லியன் டொலர் அளவுக்கு நிதி திரட்ட அலிபாபா முடிவு செய்துள்ளது. முன்னதாக, சீனாவின் விவசாய வங்கி திரட்டிய நிதியை விட 3 பில்லியன் டாலர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் எகிறி அடிப்பதால், அமெரிக்காவின் நியூயோர்க் பங்கு சந்தை இன்று பரபரப்பானது.