செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பாஸ்வேர்ட் கொள்ளை பயங்கரம்!

Posted: 2014-09-23 03:00:44
பாஸ்வேர்ட் கொள்ளை பயங்கரம்!

பாஸ்வேர்ட் கொள்ளை பயங்கரம்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜி.மெயிலில் ஐம்பது லட்சம் கணக்காளர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளன என கடந்த வாரம் பரபரப்பு தகவல் இணையத்தில் வெளியானது. மேலும் திருடப்பட்ட கணக்குகளிலிருந்து முக்கிய தகவல்கள எளிதாக எடுக்க முடிந்ததாகவும் ரஷ்ய உளவுத்துறை கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இந்த தகவலை கூகுள் நிறுவனம் அதிரடியாக மறுத்துள்ளது. ஜி.மெயில் கணக்கு மிகவும் பாதுகாப்பானது என்றும், இது தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும் தங்களது உபயோகிப்பாளர்களின் கணக்குகள் எதுவும் திருடப்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இணையத்தில் மெயில் எக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் இ மெயில் எக்கவுன்ட் ஜி மெயில் தான். முன்பு தான் யாகூ மற்றும் மைக்ரோசாப்டின் அவுட்லுக் ஆகியன முன்னணியில் இருந்தது இப்போது ஜி மெயில்தான் என்ற நிலையே நீடிக்கிறது. அதனால் இன்றுவரை ஜி மெயில் அப்ளிகேஷன்கள் அண்ட்ராய்டு மொபைல்களில் 100 கோடிக்கும் மேல் இயங்குகிறது இது அண்ட்ராய்டு மொபைல்களில் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டுமே ஆகும். இதுபோக ஐ போன் நோக்கியாவின் விண்டோஸ் மொபைல்களிலும் இது தனியாக இயங்குகிறது.

இந்தநிலையில்தான் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ஜி.மெயில் கணக்காளர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளன என பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளதும் அதை கூகுள் மறுத்துள்ளதும் நடந்துள்ளது.

ஆனாலும் உடனடியாக உங்கள் ஜி மெயில் பாஸ்வேர்டை மாற்றி கொள்ளுங்கள் என்றும் ஒரு செய்தி உலாவருகிறது. எதற்கு வம்பு உங்கள் கடவுச்சொல்லை ஒருமுறை மாற்றி விடுங்களேன்.