செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தை: என்ன வாங்கலாம்? எதைத் தவிர்க்கலாம்?

Posted: 2014-09-24 03:41:11
இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தை: என்ன வாங்கலாம்? எதைத் தவிர்க்கலாம்?

இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தை: என்ன வாங்கலாம்? எதைத் தவிர்க்கலாம்?

உள்ளங்கையில் அடங்கிவிடும் கையடக்க கணினி போல நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஒரு சில மாதங்களாகவே அதிகரித்திருக்கிறது. இந்தியாவிற்கு இது பண்டிகைக் காலம் என்பதால் பல நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு புதிய புதிய போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பல புதிய நிறுவனங்களும் மொபைல் போன் சந்தையில் நுழைந்திருக்கின்றன. இவர்களின் வரவால், அதிகமான வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. விற்பனையும் அதிகரித்திருக்கிறது. புதிய வரவாக வந்திருக்கும் பெரும்பாலான போன்கள் அண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்டவையே.

விலை குறைந்த போன்களின் வரிசையில் இந்திய நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், கார்பன், ஸ்பைஸ், செல்கான் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளே அதிகமாக இருக்கின்றன. இவற்றிற்கு அடுத்தபடியாக ஜோலோ, மோட்டோரோலா, அசூஸ், நோக்கியா, ஜியோமி எம்.ஐ, எல்ஜி, சாம்சங் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. மோட்டோரோலா நிறுவனப் பங்குகளை கூகுள் வாங்கியபிறகு அண்ட்ராய்ட் ஃபோன்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியது. முதன் முதலில் கைபேசியை உருவாக்கிய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்ற இதன் சமீபத்திய தயாரிப்புகளான மோட்டோ ஜி, மோட்டோ இ, மோட்டோ எக்ஸ் ஆகியவை கணிசமாக விற்பனையாகியுள்ளன. புதிய யுக்தியாக ஆன்லைன் விற்பனைத் தளமான ஃபிளிப்கார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து நேரடியாக மோட்டோ போன்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்திய ரூபாயில் மோட்டோ இ (விலை: 6,999/-), ஜி (விலை: 12,999/-) மற்றும் எக்ஸ் (விலை: 21,999/-). போன்கள் வேண்டுவோர் இணையதளத்தில் முன்பதிவு செய்து பெறும் முறைக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து பிற தளங்களான ஸ்னாப்டீல், அமேசான் போன்றவையும் இதே போன்ற விற்பனை முறையை தொடங்கியுள்ளன. மோட்டோ போன்களின் விற்பனை தந்த நம்பிக்கையில் புதியதாக களமிறங்கிய சீனாவின் அப்பிள் எனப்படும் ஜியோமி நிறுவன ஃபோன்களும் ஃபிளிப்கார்ட்டில் முன்பதிவு செய்து பெறும் முறை அறிமுகமானது. ஜியோமி எம்.ஐ 3 (விலை: 13,999/-) மற்றும் ரெட்மீ 1 எஸ் (விலை: 5,999/-) ஆகிய போன்கள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இதே நிறுவனத்தின் 10,000 ரூபாய்க்கு குறைவான விலையுள்ள வேறு சில வகை ஃஶ்ரீபோன்களும் வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டோ இ மற்றும் ஜி போன்களுக்கு போட்டியாக அவற்றைவிட அதிக வசதிகளுடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய கேன்வாஸ் ஃபயர் (விலை: 6,500/-), மற்றும் யுனைட் 2 (விலை(சுமார்): 6,900/-) மாடல் ஃபோன்களும் இதே காலத்தில் வெளியிடப்பட்டு நல்ல விற்பனையைப் பெற்றுள்ளன.

மேற்கண்ட அனைத்து ஃபோன்களுமே அண்ட்ராய்டின் தற்போதைய கிட்காட் 4.4 பதிப்புடன் வெளிவந்தவை. இதே சமயத்தில் செல்கான் நிறுவனம் கேம்பஸ் 35கே என்ற வகை பெயரில் அண்ட்ராய்ட் கிட்காட் மற்றும் 3ஜி வசதியுடன் கூடிய குறைந்த விலை போனை ரூ.2,999க்கு விற்பனைக்கு கொண்டுவந்தது.கார்பன் நிறுவனமும் ஸ்மார்ட் ஏ50 என்ற ஃபோனை அண்ட்ராய்ட் ஜெல்லிபீன் இயங்குதளத்துடன் (விலை: 2,699/-) விற்பனை செய்து வருகிறது.கணினித் துறையில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களான லினோவா, அசூஸ் போன்றவையும் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன.

அண்ட்ராய்ட் இயங்குதளத்துடன் கூடிய இவற்றின் விலையும் ரூ.600இல் தொடங்குவதாக உள்ளது. அசூஸ் நிறுவனத்தின் ஜென்போன் 400 மொடல் ரூ.5,999/- விலையும், 450 மொடல் ரூ.6.999/- விலையும், 501 மொடல்ரூ.9,999/- மற்றும் ரூ.12,999/- என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அண்ட்ராய்டின் தொழில் நுட்பம் மற்றும் திறனுடன் கூடிய ஃபோன்களை உலக அளவில் வெளியிடுவதற்கு அண்ட்ராய்ட் ஒன் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் தொடக்கமாக உலக அளவில் முதல்முறையாக இந்தியாவில் மைக்ரோமேக்ஸ், கார்பன், ஸ்பைஸ் நிறுவனங்களிலிருந்து ஒரே வகையான கட்டமைப்போடும், வசதிகளுடனும் ஃபோன்கள் வெளியாகியுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளியாகும் அண்ட்ராய்ட் பதிப்புகளை மேம்படுத்திக் கொள்ளலாம் என்ற வசதியுடன் வெளியாகியுள்ள இவற்றின் விலை கார்பன் ஸ்பார்க்கிள் விலை - ரூ.6,399/-, ஸ்பைஸ் டீரீம் யூனோ - ரூ.6,299/-, மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ1 - ரூ.6,499/- எனவும் விலையிடப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு மாற்றாக ஓப்பன் சோர்ஸ் இணைய பிரௌசர் நிறுவனமான மொஸில்லாவின் ஃபயர்பாக்ஸ் இயங்குதளத்துடன் கூடிய முதல் ஃபோன் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்னாப் டீல் தளத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள இன்டெக்ஸ் கிளவுட் எஃப் எக்ஸ் (விலை: 1,999/) என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த போனில் 2ஜி, இரண்டு சிம், 2எம்.பி கமரா, ஒய்பீ, புளூடூத், எட்ஜ், ஜிபிஆர்எஸ் வசதிகளுடன் உள்ளது.

ஸ்பைஸ் நிறுவனமும் ஃபயர்பாக்ஸ் இயங்குதளத்துடன் கூடிய ஃபயர் ஒன் என்ற போனை வெளியிட்டுள்ளது.

இதில் முன்பக்க கமரா, பேட்டரி அளவு, டிஸ்பிளே அளவுகள் கூடுதலாக உள்ளன. இதன் விலை ரூ.2,699 என ஸ்பைஸ் தளத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8.1 இயங்குதளத்துடன் கூடிய நோக்கியாவின் லூமியா மாடல் போன்களும் களமிறக்கப்பட்டுள்ளன. லூமியா 530 மொடல் போன் இரண்டு சிம் வசதியுடன் ரூ.6,500/- விலைக்கு கிடைக்கிறது. அண்ட்ராய்ட் இயங்குதளத்துடன் நோக்கியா எக்ஸ் மாடல் போன்கள் இதே விலையில் கிடைக்கின்றன.