செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை வாங்கும் இன்ஃபோசிஸ்

Posted: 2014-09-24 04:11:08
முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை வாங்கும் இன்ஃபோசிஸ்

முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை வாங்கும் இன்ஃபோசிஸ்

உலகின் 25 முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் இன்ஃபோசிஸ், தனது முன்னாள் அதிகாரிகளான பாலகிருஷ்ணன், மோகன்தாஸ் பாய் மற்றும் பிரகலாத் ஆகியோரிடம் இருந்து 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பங்குகளை வாங்க முடிவுசெய்துள்ளது.

இவர்களில் மோகன்தாஸ் பாய் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அலுவலகர்களாகவும், அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் பணிபுரிந்துள்ளனர். பிரகலாத் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர்.

இதுகுறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் சாரா கிடோன் கூறும்போது, இன்ஃபோசிஸ் நிறுவனம் 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, இப்போது வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ள மிகப் பெரிய ஆன்லைன் பணப் பரிவர்த்தனை இதுவாகத்தான் இருக்கும். இவர்கள் மூன்று பேரிடம் இருந்து பங்குகள் முறைப்படி பெற்றுக் கொள்ளப்பட்டு, அதற்கான தொகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இன்ஃபோசிஸ் நிர்வாக குழுவுக்கு முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இருந்து வந்த பலவிதமான ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிவர்த்தனை குறித்து மற்ற பங்குதாரர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஃபோசிஸ் வசம் உள்ள ரூ.30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பண மதிப்பிலான சொத்துக்களை, கம்பெனி நிர்வாகம் முறைப்படி பயன்படுத்தவில்லை என்று நிர்வாக குழுவுக்கு கடிதங்கள் வந்தது. இதன்படி, கம்பெனி வசம் உள்ள பெரும் நிதியை, முறைப்படி பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக எங்களது முன்னாள் அதிகாரிகளின் வசம் உள்ள 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - என்றார்.