செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கணினி பிரிண்டர் தொலைநோக்கியான அதிசயம்!

Posted: 2014-09-26 05:11:05 | Last Updated: 2014-09-26 05:19:06
கணினி பிரிண்டர் தொலைநோக்கியான அதிசயம்!

கணினி பிரிண்டர் தொலைநோக்கியான அதிசயம்!

இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று ஷெப்ஃபீல்ட். இந்த பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசியரான மார்க் ரெக்லே தலைமையிலான ஆய்வுக் குழுவினர் முப்பரிமான கணனி பிரிண்டர் ஒன்றின் தொழில்நுட்பத்தை அதிநவீன தொலைநோக்கியாக மாற்றி, நிலவை மிக நுட்பமாகவும் துல்லியமாகவும் படம் பிடித்து ஆச்சரியப்படுத்திவருகிறார்கள்.

இதுபற்றி இதைக் கண்டறிந்த மார்க் ரெக்லே கூறும்போது -

நியூட்டனின் எதிரொலிக்கும் தத்துவத்தின் அடிப்படையில் 3டி பிரிண்டர் ஒன்றை ஒரு சாதாரண கேமரா பொருத்திய டெலஸ்கோப்பாக மாற்றியுள்ளோம். இது சாதாரண டெலஸ்கோப் எடுக்கும் படத்தைவிட, 160 மடங்கு அதிதுல்லியமான படங்களை எடுத்துக் கொடுத்துள்ளது.

இதுவரை நாசா, சீனா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிலையங்கள் அனுப்பிய செயற்கைக்கோள் எடுத்த படங்களைவிட, நாங்கள் வடிவமைத்த 3டி பிரிண்டர் அடிப்படையிலான இந்த நவீன டெலஸ்கோப், நிலவின் நிலப்பகுதியை மிக துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. நிலவின் மேடு பள்ளங்களான மலைப் பகுதிகள், சமவெளிகளை எங்கள் டெலஸ்கோப் நல்ல முறையில் படம்பிடித்துள்ளது. இது நிலவைப் பற்றிய புதிய பரிணாமத்தை ஏற்படுத்துவதோடு, விண்வெளி ஆய்வுத்துறையில் ஒரு புதிய முயற்சியாக அமையும்.

நாங்கள் இந்த டெலஸ்கோப்பில் பயன்படுத்தியுள்ள கமரா இங்கிலாந்தில் சாதாரணமாக கிடைக்கும் ரோஸ்பெரி பை கமராவாகும். இந்த டெலஸ்கோப்பில் பொருத்துவதற்காக அதிநவீன சிறிய கண்ணாடிகள், லென்சுகளை ஒன்லைன் சப்ளையர்களிடம் வாங்கினோம். எங்கள் புதிய கண்டுபிடிப்புக்கு பைகான் டெலஸ்கோப் என்று பெயரிட்டுள்ளோம் - என்றார்.