செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

இந்தியாவை கைப்பற்றும் ஜப்பான்!

Posted: 2014-09-26 05:16:11
இந்தியாவை கைப்பற்றும் ஜப்பான்!

இந்தியாவை கைப்பற்றும் ஜப்பான்!

ஸ்மார்ட் சிட்டி எனப்படும் புதிதாக உருவாக இருக்கும் ஹைரெக் நகரங்கள், இந்தியாவின் நெருக்கடிகள் மிகுந்த மாநகரப் பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல மாற்றத்தை உருவாக்கும். டிஜிற்றல் இந்தியா நாட்டில் அறிவுசார் பொருளாதார மாற்றத்தை உருவாக்கும் எனவும் எனவும் இந்தியப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மும்பை - டில்லி பெருநகரகங்களுக்கிடையே பல ஹைரெக் நகரங்கள் உருவாகும் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இதற்காக மட்டும் மிகப்பெரும் அந்நிய நிதி சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் (100 பில்லியன் அமெரிக்க டொலர்) இந்த ஹைரெக் நகரங்களுக்கு வருமென்றும் இதில் 26 வீதமான நேரடி நிதியை ஜப்பான் முதலீடு செய்யவிருக்கிறது என்ற செய்தியை பத்திரிகைகள் முன்பே எழுதின.

மோடியின் ஜப்பான் பயணத்திற்கு பிறகு ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட முதலீடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பெறப்பட்டுள்ளதாக இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கும் முதலீடுகள் செய்வதாகவும் அறிவித்துள்ளது. ஐ.பி.எம், மைக்ரோசாப்ட், சிஸ்கோ உள்ளிட்ட பன்நாட்டு மெகா கம்பெனிகள் இணைந்துள்ள ஸ்மார்ட் சிட்டி கவுன்சில், இந்திய கார்ப்பரேட்டுகள் இணையம், சி.எம்.ஏ.ஐ குழுமம், இண்டியன் இன்ப்ராஸ்ட்ரெக்சர், பவர்லைன் போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் நகரப் பிரச்சினைகளுக்கான ரெக்னோலஜி தீர்வுகளைக் கூறும் தனித்தனி கருத்தரங்கள், மாநாடுகள், ஆய்வுக் கூட்டங்களை இந்த ஆண்டு முழுவதும் டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடத்துகின்றன.

மிகப் பெரும் மூலதன பலம் கொண்ட குழுமங்கள் தகவல் தொடர்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஸ்மார்ட் சிற்றிகளை நிர்மாணிக்கும் திட்ட ஒப்பந்தங்களை பெறவிருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கும் இடையில் இப்போதே பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துவிட்டன. இதில் சிங்கப்பூரும், ஜப்பானும் இப்போது முன்னணியில் இந்தியாவுடன் நெருங்கி வந்துள்ளன.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பிரதமர் மோடியின் கைங்கரியத்தால் பி.ஜே.பி.யின் டிஜிற்றல் இந்தியாவின் மின்னணு கட்டமைப்பு மற்றும் ஹைரெக் நகரங்களை நிர்மாணிக்கும் திட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம் கொழிக்கும் மாபெரும் சந்தையாக இந்தியாவில் உருவெடுத்திருக்கின்றன. வளர்ந்த நாடுகளில் பெரும் சந்தையாக உருவெடுத்துள்ள டெலி மெடிசினை சுதேசியம் பேசிய பி.ஜே.பி கூச்சமின்றி இந்தியாவிற்குள் அப்படியே இறக்குமதி செய்யவிருக்கிறது. ஏழை இந்தியாவில் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்கால மாபெரும் சந்தையாக மாறவிருக்கிறது.