செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

செவ்வாய் விண்கலப் போட்டி: ஓர் அசத்தல் ஒப்பீடு (வீடியோ)

Posted: 2014-09-27 07:21:41 | Last Updated: 2014-09-27 07:23:16
செவ்வாய் விண்கலப் போட்டி: ஓர் அசத்தல் ஒப்பீடு (வீடியோ)

செவ்வாய் விண்கலப் போட்டி: ஓர் அசத்தல் ஒப்பீடு (வீடியோ)

கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதியன்று செவ்வாய்க் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியது இந்தியா. இதற்குச் சரியாக 13 தினங்கள் கழித்து 2013 நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்காவின் கேப் கேனவரல் விண்வெளி ஆராய்ச்சி மையத் தளத்திலிருந்து இதே செவ்வாய் கிரக சுற்றுப்பதையை அடையும் நோக்கத்தில் 'மேவன்' என்ற விண்கலத்தை ஏவியது.

IMAGE_ALT

மேவன் விண்கலம்

மங்கள்யான் செவ்வாய் சுற்றுப்பாதையை 2014 செப்ரெம்பர் 24 திகதி காலை 7.53 மணிக்கு அடைந்தது. மேவன் இரண்டு தினங்களுக்கு முன்னதாக செப்ரெம்பர் 21ஆம் திகதி இரவு 10.24 மணிக்கு செவ்வாய் சுற்றுப் பாதையை அடைந்தது. 15 நாள்கள் மங்கள்யானை விட மேவன் குறைவாகப் பயணித்து செவ்வாய் சுற்றுப்பாதையை அடைய அமெரிக்க விண்கலம் விண்வெளியில் தேர்வு செய்த பாதை வேறு என்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இந்தியா அனுப்பிய விண்கலம் செவ்வாய் சுற்றுப்பாதையை அடைந்து அதன்பின் ஆறு மாதங்கள் சுற்றி வந்து ஆராய்ச்சி செய்யும் என்றால், அமெரிக்காவின் மேவன் ஒரு வருடம் சுற்றி வந்து ஆராய்ச்சி செய்யவிருக்கிறது. மங்கள்யானில் ஐந்து ஆராய்ச்சி உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன; மேவன் விண்கலத்தில் எட்டு ஆராய்ச்சி உபகரணங்கள்!

செவ்வாய் கிரகம், ஆதியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையிலும் ஆனால் காய்ந்த மேற்பரப்பிலும் இருந்தது. ஆனால், பல லட்சம் வருடங்களில் அது சூடான சீதோஷ்ண நிலையிலும், அதேசமயம் பல இடங்கள் ஈரமானதாகவும் மாறியது எப்படி என்கிற விஷயத்தை மேவன் விண்கலம் கூடுதலாக ஆராய்ச்சி செய்யவிருக்கிறது.

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள 10ஆவது விண்கலம் இது. செவ்வாய் சுற்றுப்பாதையை நோக்கி இதற்கு முன் அமெரிக்கா அனுப்பிய 3 விண்கலங்கள் தோல்வியைச் சந்தித்தன. ஆனால் முன்னர் அமெரிக்கா 2, ஐரோப்பா ஒன்று என அனுப்பப்பட்ட மொத்தம் 3 விண்கலங்கள், இப்போதும் செவ்வாய் சுற்றுப்பாதையில் சுற்றிவந்து தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் மங்கள்யானும் இணைகிறது. இருப்பினும் செவ்வாய் சுற்றுப்பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளப் போவதில்லை!

அமெரிக்காவின் மேவன் விண்கலம் செவ்வாயிலிருந்து 78 மைல் தொலைவில் நீள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. மங்கள்யான் செவ்வாய் மேற்பரப்பிலிருந்து குறைந்தபட்சம் சுமார் 400 கி.மீ., அதிகபட்சம் 79,000 கி.மீ. தொலைவில் சுற்றிவரும்.

அமெரிக்காவின் கொலராடாவில் உள்ள லிட்டில்டன் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் மேவன் விண்கலம் இயங்கித் தன் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

மேவன் விண்கலத்துக்கு 671 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியிருக்கிறது; இதைத் தயாரிக்க அமெரிக்கா எடுத்துக்கொண்ட கால அளவு 11 வருடங்கள். ஆனால், இந்திய மங்கள்யான் விண்கலத்துக்கு ஆன செலவு 71 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே!. மங்கள்யான் தயாரிக்க இந்திய விஞ்ஞானிகள் எடுத்துக்கொண்ட கால அளவு 3 வருடங்கள் மட்டுமே!

அமெரிக்காவின் மேவன் விண்கலத்துக்கு ஆன செலவில் இந்தியா 9 மங்கள்யான் விண்கலங்களைத் தயாரித்து விண்ணில் ஏவ முடியும்! எனவே, குறைந்த செலவில் விண்கலம் அனுப்பி சாதனை புரிந்து உலகை வியப்பில் ஆழ்த்திய இந்திய விஞ்ஞானிகளை அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகள் பெரிய அளவில் பாராட்டுவதில் வியப்பென்ன இருக்க முடியும்?