செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஸ்மார்ட் போன்களை குப்பையில் போட்டுவிட்டு! ஸ்மார்ட் கிளாஸ்களை அணிந்து கொள்ளுங்கள்!!

Posted: 2014-10-03 01:52:46
ஸ்மார்ட் போன்களை குப்பையில் போட்டுவிட்டு! ஸ்மார்ட் கிளாஸ்களை அணிந்து கொள்ளுங்கள்!!

ஸ்மார்ட் போன்களை குப்பையில் போட்டுவிட்டு! ஸ்மார்ட் கிளாஸ்களை அணிந்து கொள்ளுங்கள்!!

செல்போன்களின் காலம் முடிந்து, அண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் காலம் என்று வர்ணித்த காலம் இன்னும் சில மாதங்களில் மலையேறிவிடும்போல் இருக்கிறது. ஒருபக்கம் சாம்சங், அப்பிள் ஆகிய நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்களை போட்டிபோட்டு களம் இறக்கி கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ்களை சந்தையில் இருக்கும் வேலையில் சுறுசுறுப்பாக இருக்கின்றன இதே நிறுவனக்கள். ஸ்மார்ட் போன் சந்தையின் போட்டியில், அப்பிள் நிறுவனம் ஐபோன் 6, 6 பிளஸ் போன்களை அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் புதிய சாம்சங் கலக்சி 4 பாபிலட் போனை அறிமுகம் செய்தது.

இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் போட்டியாக சொனிநிறுவனமும் தனது புது தயாரிப்பை களம் இறக்குகிறது. ஆனால், மற்ற இரண்டு நிறுவனங்களைப் போல் அல்லாமல், சொனி நிறுவனம் ஸ்மார்ட் கிளாஸ் வரிசையை களம் இறக்குகிறது. பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சொனியின் ஸ்மார்ட் கிளாஸ், இப்போது டெவலப்பர்களின் ஆதரவை நாடியுள்ளது. இந்த கிளாசில் செயற்படக்கூடிய செயலிகளை (ஆப்ஸ்) ஊக்குவிப்பதற்காக இந்த முயற்சியில் சொனி இறங்கியுள்ளது.

வடிவமைப்பு நேர்த்தி இல்லாவிட்டாலும் சொனியின் ஸ்மார்ட் கிளாஸில் ஹாலோ கிராபிக் டிஸ்பிளேயைக் கொண்டிருப்பதை சந்தையாளர்கள் முக்கியமாக வசீகரிப்பாகச் சொல்கின்றனர். இதன் பொருள் இதில் உள்ள லென்ஸ் 85 சதவீதம் ஊடுருவி பார்க்க கூடியதாக இருக்கும். ஹாலோ கிராம் நுட்பம் கொண்ட இந்த லென்ஸ்கள் காண்பவர் நோக்கும் பொருள் தொடர்பான தகவல்களை பார்க்கும் காட்சி மீதே ஓடவைக்கும். இவை இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருக்கும் என்றும் சொனி சொல்கிறது. ஸ்மார்ட்போனுடன் இணைந்து இது செயற்படுகிறது. அண்ட்ராய்டு சாதனங்களுடன் பொருந்தக் கூடியதாகவும் இருக்கும்.

இமேஜ் சென்சார், 3 மெகா பிக்சல் கமரா, கைரோஸ் கோப், மின்னணு, கொம்பஸ் மற்றும் மைக் உட்பட முக்கிய அம்சங்களை இந்த ஸ்மார்ட் கிளாஸ் கொண்டிருக்கிறது. சொனி இப்போதே இந்த கிளாஸை மெய்நிகர் வடிவில் டெவலப்பர்களுக்கு வெள்ளோட்டம் காட்டி வருகிறது.

இந்த ஆண்டு இறுதியில் டெவலப்பர் பதிப்பும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நுகர்வோருக்கான மாதிரியும் சந்தைக்கு வந்துவிடும் என்கிறது சொனி நிறுவனம். இனி ஸ்மார்ட் போன்கள் குப்பைக் கூடைக்குள்தானா?