செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

புட்டுப் புட்டு வைக்கும் மனிதவளக் குறியீடு! நோர்வே முதலிடம்! இந்தியா 136; இலங்கை 74

Posted: 2014-10-08 06:44:22
புட்டுப் புட்டு வைக்கும் மனிதவளக் குறியீடு! நோர்வே முதலிடம்! இந்தியா 136; இலங்கை 74

புட்டுப் புட்டு வைக்கும் மனிதவளக் குறியீடு! நோர்வே முதலிடம்! இந்தியா 136; இலங்கை 74

சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்குச் செல்லும் முன்பாக, உலகத் தொலைக்காட்சிகளில், இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி GDP) - 5.7 சதமாக உயர்ந்துள்ளது என்றும், இது தனது ஆட்சியின் 100 நாள் சாதனை என்றும் பெருமையடித்துக் கொண்டார். மனித வள அறிக்கை 2013ஐ (Human Development Report 2013) ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 186 நாடுகளில் வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலம், கல்வி, பொதுச் சுகாதாரம், வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், குழந்தை இறப்பு விகிதம், ஆண், பெண் விகிதாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு மனிதவள நிலைகளில் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்று ஆராய்ந்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

186 நாடுகளில் இந்தியா அதலபாதாளத்தில் 136ஆவது இடத்தில் இருக்கிறது என்பதனை வேதனையோடு சொல்கிறது அந்த அறிக்கை. இன விடுதலைப் போராட்டத்தால் தமிழ்மக்கள் வாழ்வை இழந்து தவிக்கும் இலங்கை 73ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால் இன்றைக்குப் பொருளாதார விஞ்ஞானத்தில், ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல என்ற வாதம் மேலோங்கி வந்துள்ளது.

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு (GDP) மனிதவளக் குறியீட்டு எண்ணின் HUMAN DEVELOPMENT INDEX - HDI) உயர்வையும் பொறுத்துதான் என்ற கருத்தை பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் உள்ளிட்ட பலர் உரக்கச் சொல்லி வருகின்றனர். ஜப்பானுக்குச் செல்லும் போதோ, ஜப்பானிலோ, ஜப்பானிலிருந்து வந்த பிறகோ, மோடி மனிதவளக் குறியீட்டினைப் பற்றி பேசவில்லை. அவர் பேசப் போவதும் இல்லை.

186 நாடுகளில் நோர்வே 0.955 புள்ளிகள் பெற்று (ஒரு புள்ளிக்கு) முதலிடத்தில் உள்ளது. இந்தியா 0.554 புள்ளிகள் பெற்று தரவரிசையில் 136ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. எனவே பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்திவிடாது. மக்களின் மீது அக்கறை கொண்டுள்ள நல்லாட்சியினால் மட்டுமே மனிதவளம் முன்னேற்ற மடைவது சாத்தியம்.

GDPயும் HDIயும் எதிர் எதிர் துருவங்களா?

சுதந்திரம் பெறுவதற்கு முன் 1900-01ஆம் வருடம் முதல் 1946-47 வரை இந்தியாவின் ODQ வளர்ச்சி 0.9 சதம் மட்டுமே. சுதந்திரத்திற்குப் பின்னர் 1947-48 முதல் 1980-81 வரை 3.4 முதல் 3.7 சதமாக ODQ வளர்ச்சி உயர்ந்தது. ஆனால் அதற்குப் பின்னர் தான் ODQ நாலு கால் பாய்ச்சலில் சென்றதைக் காண முடிந்தது. 1980-81 முதல் 1990-91 வரை 5.2 சதமாகவும், 1990-91 முதல் 2000-01 வரை 5.9 சதமாகவும், 2000-01 முதல் 2010-11 வரை 7.6 சதமாகவும் ODQ உயர உயரப் பறந்தது. 1947-1990 கால கட்டங்களில் ODQ உடன் சேர்ந்து மனித வளக்குறியீடும் வளர்ந்ததை நம்மால் காணமுடிகிறது. இந்தியனின் சராசரி ஆயுட்காலம், கல்வி அறிவு, பொது சுகாதாரம், குழந்தை இறப்பு, தனி நபர் வருமானம் இவை அனைத்திலும் 1947 முதல் 1990 வரையிலும் சீரான வளர்ச்சி இருந்தது. வளர்ச்சி விகிதத்தை இன்னும் அதிகரித் திருக்கலாமா என்பது ஆய்வுக்குரிய அம்சம்.

ஆனால் 1990 முதல் 2011 வரை மனித வளக்குறியீடு நமது அண்டை நாடுகளான, நமக்குப் பின் சுதந்திரம் பெற்ற நாடுகளான சீனா, பங்களா தேஷ், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளின் வளர்ச்சியை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது என்பதை அறிய முடிகிறது.15-20 ஆண்டுகளுக்கு முன்னால் வங்க தேசத்தைவிட தனிநபர் வருமானம் இந்தியாவில் 50 சதம் அதிகம். ஆனால் 2011இல் வங்க தேசத்தை விட நம்நாட்டின் தனி நபர் வருமானம் 100 சதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் 1990களில் வங்கதேசத்தை விட சராசரி ஆயுளில் இந்தியா 6 வருடங்கள் அதிகம் என்ற நிலையில் இருந்து, இன்று வங்கதேசத்தைவிட நான்கு வருடங்கள் குறைவு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நோய் தடுப்பு இந்தியாவில் 72 வீதம், வங்கதேசத்தில் 95 வீதம். இஸ்லாமியர் அதிகம் வாழும் வங்க தேசத்தில், இந்தியப் பெண்களைவிட 20 வீதம் அதிகம் படிக்கின்றனர். இதைத்தான் மனிதத் திறன் இயல்பு (Human capabilities) என்று சொல்கிறோம். கல்வி அறிவு, சுகாதாரம், நோய் தற்காப்பு, வாழ்நாள் அதிகரித்தல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளாமல், வெறும் GDP உயர்வதில் எந்த வளர்ச்சியும் இல்லை.

ஏன் இந்த நிலை?

இந்தியாவில் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதுதான் இதற்குத் தலையாய காரணம்.நாட்டின் வருமானம் சரியான வீததத்தில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. அரசு பொது சுகாதாரம், கல்வி, மக்கள் வாழ்நிலை இவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, இவை அனைத்தையும் தனியாரிடம் வியாபாரச் சரக்காக மாற்றியதும் இந்த அவல நிலைக்குக் காரணம்.இந்தியாவின் செல்வந்தர்களுக்கும், சாதாரண மனிதனுக்குமான இடைவெளி, எல்லோருக்கும் ஒரே மருத்துவம், எல்லோருக்கும் ஒரே கல்வி, எல்லோருக்கும் ஒரே தரத்தில் நோய் தடுப்பு... போன்ற பல படிகளில் நாம் பல நாடுகளை விட மிகவும் பின் தங்கியிருக்கிறோம். அதனால்தான் நாம் மனிதத் திறன் இயல்பு புள்ளியில் பின்தங்கியிருக்கிறோம்.

உலகமயமும் மனிதத்திறன் இயல்பும்

1990களின் துவக்கத்திலிருந்தே மனிதத் திறன் இயல்பு குறியீடு இந்தி யாவில் வீழத் தொடங்கியது. இதற்கு முழு முதற்காரணம் 1990களில் இருந்து செயற்படுத்தப்பட்ட தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகள்தான். இந்தியர்கள் 1990களுக்குப் பின் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இழந்து நிற்கின்றனர். அனைத்து சட்டங்களும் பெருஞ் செல்வந்தர்கள் நலனுக்கு ஆதர வாகவும், சாதாரண மக்களுடைய நலன்களுக்குப் பாதகம் தருவதாகவும் திருத்தப்பட்டு வருகின்றன. Prosperity Index என்று சொல்லக் கூடிய குறியீட்டு அமைப்பு தரும் புள்ளிவிபரப்படி 1990இல் இந்தியர்களில் 75 சதம்பேர் இந்திய அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தனராம். அது 59 சதமாக 2012இல் குறைந்துவிட்டது என அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது.