செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ஒன்லைன் வணிகத்தில் 10 மணி நேரத்தில் 100 கோடி வசூல்! மிரட்டும் பிலிப்கார்ட்

Posted: 2014-10-08 06:45:54
ஒன்லைன் வணிகத்தில் 10 மணி நேரத்தில்  100 கோடி வசூல்! மிரட்டும் பிலிப்கார்ட்

ஒன்லைன் வணிகத்தில் 10 மணி நேரத்தில் 100 கோடி வசூல்! மிரட்டும் பிலிப்கார்ட்

‘பிலிப்கார்ட்’ என்ற ஒன்லைன் வர்த்தகம் நிறுவனம் கடந்த திங்கட்கிழமையன்று ஒரே நாள் சலுகை என்று கூறி வர்த்தகம் தொடங்கி 10 மணி நேரத்தில் 100 கோடி ரூபாக்கு வியாபாரம் செய்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக சில்லறை வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, டில்லியில் நடைபெற்ற ‘சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூலதனம்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அனைத்து சில்லறை வர்த்தகர் சங்கங்களும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சமீபத்தில்தான், ஒன்லைன் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அதன் முறைகேடுகளை தடுக்க சட்டம் இயற்றவேண்டும் என்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தோம். இந்த சூழ்நிலையில், செவ்வாயன்று 'பிலிப்கார்ட்' என்ற ஒரு ஒன்லைன் வர்த்தக நிறுவனம் குறித்து நாளிதழ்களில் வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அந்த கம்பனி தொடங்கிய சில காலத்திலேயே பல கோடிகளை லாபமாக ஈட்டிவருகிறது. இதனால் நாட்டிலுள்ள லட்சக்கணக்கான சில்லறை வர்த்தகர்கள் கடுமையான பாதிப்படைந்து வருகிறார்கள். பிலிப்கார்ட் கம்பனி கடந்த திங்களன்று ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு விற்பனை என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அந்த கம்பனி ஸ்மார்ட்போன், லப்ரொப்கள், முகப்பூச்சு மற்றும் அழகு சாதனங்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட 70 பொருள்களுக்கு 1 ரூபாயில் தொடங்கி 30 வீதம் வரை தள்ளுபடி என்றும் இச்சலுகை திங்கள்கிழமையன்று ஒரே நாள்மட்டுமே என்றும் அறிவித்தது.

இதனால் அறிவிப்பு தொடங்கி 10 மணி நேரத்திற்குள் அது அறிவித்த அனைத்து பொருள்களும் விற்றுத் தீர்ந்து விட்டன. பதிவு செய்து விட்ட பல நுகர்வோர்களுக்கு பொருள்கள் விற்றுத்தீர்ந்து விட்டதால் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்து அவர்கள் முகநூல்களில் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இங்கு பிரச்சினை, அவர்கள் ஏமாற்றமடைந்தது மட்டுமல்ல; நாட்டின் பல ஆயிரக்கணக்கான சில்லறை வர்த்தகர்கள் தங்களது பொருள்களை விற்கமுடியாமல் பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதை 'சாதனை' என்று பிலிப்கார்ட் கம்பனி விளம்பரம் வேறு செய்துள்ளது. எனவே, இதுபோன்ற மோசடியான ஒன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். உடனடியாக அரசு தலையிட்டு ஒன்லைன் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சில்லறை வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.