செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

சென்னை நொக்கியா தொழிற்சாலை நிரந்தரமாக மூடல்

Posted: 2014-10-09 04:02:17
சென்னை நொக்கியா தொழிற்சாலை நிரந்தரமாக மூடல்

சென்னை நொக்கியா தொழிற்சாலை நிரந்தரமாக மூடல்

சென்னை ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நொக்கியா செல்பேசி உற்பத்தி ஆலை நவம்பர் முதலாம் திகதி முதல் மூடப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நொக்கியாவை சமீபத்தில் விலைக்கு வாங்கிய மைக்ரோ சொப்ட் நிறுவனம் சென்னையில் இயங்கும் செல்பேசி நிறுவனத்துடன் செல்பேசிக்கான ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை என்று சொல்லி நிறுவனத்தில் பணியாற்றிய 6ஆயிரத்து 800 தொழிலாளர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.

தற்போது உற்பத்தியை நிறுத்திவைப்பு என அறிவித்து மீதமுள்ள 800 தொழிலாளர்களையும் வெளியேற்ற முனைகிறது. 2006ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனம் தொழில் தொடங்குவதற்கு குறைந்த விலையில் நிலம், தடையற்ற மின்சாரம், வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகளிடம் அந்நிறுவனம் பெற்றது.

குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது. தொழிலாளர் நலச் சட்டங்கள் அமுலாக்கப்படவில்லை என்ற குற்றசாட்டும் வழக்குகளும், தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களும் நடந்து வந்தன. இதையடுத்து நவம்பர் முதலாம் திகதி முதல் மூடப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.