செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தவறுகள் திருத்தப்பட்டு பயனுள்ளதாக வெளிவருகிறது வின்டோஸ் 10!

Posted: 2014-10-15 02:41:13
தவறுகள் திருத்தப்பட்டு பயனுள்ளதாக வெளிவருகிறது வின்டோஸ் 10!

தவறுகள் திருத்தப்பட்டு பயனுள்ளதாக வெளிவருகிறது வின்டோஸ் 10!

மைக்ரோசொவ்ட் நிறுவனம் தாம் விட்ட தவறுகளையெல்லாம் சரிசெய்து புதிய பலவசதிகளுடன் வின்டோஸ் 10 ஐ உருவாக்கியுள்ளதாம். இந்த புதிய வரவு தொழில் முனைவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் புதிய சந்தைப்படுத்தல் தலைவர் டோனி ப்ரோப்பெட், சான் பிரான்சிஸ்கோவில் நடந்த டிரீம்போர்ஷ் கலந்தாய்வில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வின்டோஸ் 9 குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய அவர், ''மைக்ரோசொவ்ட்டைப் பொறுத்த வரையில் ஒரு பதிப்பு மென்பொருள் தோல்வி அடைந்து விட்டால், அதற்கு அடுத்த மேம்படுத்தப்பட்ட மென்பொருளை சம்பிரதாயத்திற்கென வெளியிட்டுவிட்டு, அதற்கு அடுத்த பதிப்பை நோக்கி பயணிப்பது வழக்கம்.

அந்த வகையில் வின்டோஸ் 9 வந்தது; வந்தவாறே போய்விட்டது. இதைத் தொடர்ந்து வின்டோஸ் 10 விரைவில் வரவுள்ளது"

வின்டோஸ் 10 ஆனது 8 இல் இருந்து, முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். பயன்படுத்துவதற்கு மட்டும் மாறுபட்டதல்ல. இதன் வடிவமைப்பு முறையையும் மாறுபட்டதாக கையாண்டுள்ளனர்.

இதன் முன்னோட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்னரே வெளியிட்டு விட்டார்கள். அது தற்சமயம் ஒரு மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு விட்டது. அதைப் பயன்படுத்தியவர்களின் கருத்துக்களுக்கேற்ப மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

வின்டோஸ் 8 தொழில் முனைவோர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் உகந்ததாக அமையவில்லை என்பது அவர்களின் புறக்கணிப்பின் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். எனவே தொழில் முனைவோர்களையும், தனியார் நிறுவனங்களையும் முதல் பயனாளிகளாக மனதில் கொண்டே வின்டோஸ் 10 உருவாக்கப்பட்டுள்ளது. என்று வெர் தெரிவித்திருக்கிறார்.