செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் படகு மற்றும் நீச்சல் போட்டி நடத்தக் கோரிக்கை!

Posted: 2014-12-23 02:44:31
தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில்  படகு மற்றும் நீச்சல் போட்டி நடத்தக் கோரிக்கை!

தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் படகு மற்றும் நீச்சல் போட்டி நடத்தக் கோரிக்கை!

தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் தமிழக - இலங்கை இரு நாட்டு மீனவர்களுக்கான படகு மற்றும் நீச்சல் போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையும் தமிழகமும் பன்னெடுங்காலமாக பண்பாடு மற்றும் கலாசாரங்களில் ஒன்றுபட்டு விளங்கியதற்கு கடல், கடல்வளம், கடல்வழி வணிகம், கடல் சார்ந்த வாழ்க்கையே பின்னிப் பிணைந்திருந்தது.

இலங்கையுடனான இந்த உறவில் தமிழகத்தின ஏனைய பகுதியினரை விடவும் கூடுதல் நெருக்கம் தனுஷ்கோடி மீனவர்களுக்கே இருந்தது.

பன்னெடுங்காலமாக தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே படகுகள் வாயிலாகப் போக்கு வரத்து நடதத்ப்பட்டது.

மலையகத் தேயிலைத் தொழிலாளர்களும், தமிழக - இலங்கை வணிகர்களும் இந்தத் தடத்தைப் பயன்படுத்திவந்தனர்.

1914இல் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு 'கர்ஸான்', 'தி எல்ஜின்', 'ஹார்டிஞ்' எனும் மூன்று நீராவிக் கப்பல்கள் மூலம் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

இதன்மூலம் தமிகத்திலிருந்து பல்வேறு வகையான பண்டங்களும், சரக்குகளும் இலங்கை கொண்டு செல்லப்பட்டன. அதேபோன்று கொழும்பிலிருந்து இலத்திரனியல் பொருட்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், இலங்கையில் யாழ்பாணம், மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் பொருளாதார மற்றும் வியாபார வளர்ச்சி பெருகிக் காணப்பட்டது.

கப்பல் போக்குவரத்து ஆரம்பித்து சரியாக 50 ஆண்டுகளில் 1964ஆம் ஆண்டு டிசெம்பர் 22 ஆம் திகதி துறைமுக நகரமான தனுஸ்கோடி புயலில் சிக்கி அழிந்தது. அதனால் கப்பல் சேவை பாதிக்கப்பட்டு பின்னர் 1967ஆம் ஆண்டுராமேசுவரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

'ராமானுஜம்' என்ற பெயரிடப்பட்ட இந்த பயணிகள் கப்பலில் அதிகப்பட்சமாக 400 பேர் வரையிலும் பயணம் செய்யலாம்.

1983ஆம் ஆண்டு வரை தடைபடாமல் நடைபெற்ற 'ராமானுஜம்' கப்பல் போக்குவரத்து இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டது.

2009, மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த பின்னர் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களிடையே சென்னை மற்றும் கொழும்பில் நடைபெற்ற பேச்சுகள் தோல்வியையே தழுவின.

இந்த நிலையில் தனுஸ்கோடி புயலில் அழிந்து 50 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் தமிழக - இலங்கை இரு நாட்டு மீனவர்களுக்கம் இடையில் நீச்சல் போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறியதாவது

1964 டிசெம்பர் 22 அன்று புயலில் தனுஸ்கோடி நகரம் அழிந்த பிறகு இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் 1967ஆம் ஆண்டு மீண்டும் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் புயலின் தாண்டவத்தில் இருந்து மீளாத இரு நாட்டு மக்களும் மீண்டும் கப்பல் போக்குவரத்துக்குத் தயங்கினர்.

இந்த காலப்பகுதியில் தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே 04.04.1967 அன்று நீச்சல் போட்டியை இரு நாட்டு அரசுகளும் நடத்தின.

அது போல தனுஸ்கோடி புயலில் அழிந்து 50 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் தமிழக-இலங்கை இரு நாட்டு மீனவர்களுக்கம் இடையில் உள்ள மனக்கசப்புகளை நீக்க நீச்சல் போட்டியோ அல்லது படகுப் போட்டியோ நடத்த வேண்டும். இதன் மூலம் இருநாட்டு மீனவர்களின் பாரம்பரிய உறவும் வளரும், மீனவப் பேச்சும் சுமுகமாக அமையும், - என்றார்.