செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வாழ்வாதாரத்தை வேட்டுவைத்த குரங்கு மாட்டிக்கொண்டது இரும்புக் கூட்டுக்குள்!

Posted: 2015-01-12 01:20:35
வாழ்வாதாரத்தை வேட்டுவைத்த குரங்கு மாட்டிக்கொண்டது இரும்புக் கூட்டுக்குள்!

வாழ்வாதாரத்தை வேட்டுவைத்த குரங்கு மாட்டிக்கொண்டது இரும்புக் கூட்டுக்குள்!

தென்மராட்சி, மீசாலைப்பகுதியில் தனது வாழ்வாதரத்தை அழித்து வந்த குரங்கு கூட்டத்தில் ஒரு குரங்கை விவசாயி ஒருவர் கூடுவைத்துப் பிடித்து வனலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்தப் பகுதி விவசாயிகளின் தோட்டப் பயிர்களை தினமும் குரங்குக் கூட்டங்கள் நாசம் செய்து வருகின்றன. இதுகுறித்து தோட்டச் செய்கையாளர்கள் விவசாயத் திணைக்களத்திடம் பலதடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது குரங்குகளை கூடுகள் வைத்துப் பிடித்து அப்புறப்படுத்தவதற்கு விவசாயத் திணைக்களம், வனவிலங்குகள் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும் அந்தத் திட்டம் நீண்ட நாட்களாகச் செயற்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், மீசாலையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது சொந்தப் பணத்தில் இருப்பிலாலான கூடு ஒன்றைத் தயாரித்து குரங்கு ஒன்றை பிடித்துள்ளார்.

இந்தக் குரங்கை தற்போது வனலாகா அதிகாரிகள் பொறுப்பேற்றுச் சென்றுள்ளனர்.