செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

ரயில் சேவையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி நிலக்கரி ரயில் சேவை!

Posted: 2015-01-19 03:12:50
ரயில் சேவையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி நிலக்கரி ரயில் சேவை!

ரயில் சேவையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி நிலக்கரி ரயில் சேவை!

இலங்கையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட காலத்தையும், அப்போது பயன்படுத்தப்பட்ட ரயிலையும் நினைவூட்டும் விதத்திலான நிலக்கரி ரயில் சேவை ஒன்று கடந்த சனிக்கிழமை அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நடத்தப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிலக்கரி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இலங்கை பிரித்தானியாவின் ஆளுகைக்குட்பட்டிருந்த போது இலங்கையின் முதலாவது ஆளுநராக இருந்த பிரட்றிக் நோர்த்தின் பெயரில் பயன்படுத்தப்பட்டது இந்த நிலக்கரி இயந்திர ரயில்.

இந்த ரயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மடு நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது. இந்த நிலக்கரி இயந்திர ரயில், அநுராதபுரம் ரயில் நிலையத்தில் தரித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்: நிருஜன்