செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

தந்தையை இழந்தாலும் மன உறுதியை இழக்காத இளைஞன்!

படமும் தகவலும் : ஏ.எல்.எம்.சலீம்.
Posted: 2015-03-05 02:11:23 | Last Updated: 2015-03-05 02:21:00
தந்தையை இழந்தாலும் மன உறுதியை இழக்காத இளைஞன்!

தந்தையை இழந்தாலும் மன உறுதியை இழக்காத இளைஞன்!

வறுமை, கல்வி முன்னேற்றமின்மை, இளம் வயதிலேயே தகப்பனை இழந்த நிலைமை ஏற்படும் போது இக்கால இளைஞர்கள் வேறு பாதைகளில் வழி தவறிச் செல்லும் சம்பவங்களை நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால் தன் இளம் வயதிலேயே தகப்பனை இழந்தை கல்முனைக் குடியைச் சேர்ந்த எம்.எஸ்.சபீக் எனும் இளைஞன் வாழ்கையோடு போராடவும் தன் சொந்தக் காலில் நின்று குடும்பத்தைக் காப்பாற்றவும் முனைந்துள்ளார் என்றால் ஆச்சரியப்படத்தக்க விடயமே.

IMAGE_ALT

இந்த இளைஞன் தன்சொந்தக் காலில் நிற்பதற்காக தெரிவு செய்த தொழில் எறிக்கும் கொடும் வெயிலிலும் ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று கறிவேப்பிலைகளை விலைபேசி அவற்றை எடுத்துவந்து கல்முனை பொதுச் சந்தையில் மொத்தமாக விற்பனை செய்து நாளாந்த வருமானம் பெற்று வருகிறார்.

நான்கு ஆண்களையும் ஒரு பெண்ணையும் சகோதரர்களாகக் கொண்ட குடும்பத்தை இந்த உழைப்பின் மூலமே இவர் பராமரித்து வருகின்றார்.

குறைந்தது தினமும் ஒரு தடவை 500 ரூபா வருமானம் பெற்றுவருவருகிறார் எனக் கூறும் இவர் அதனைத் தன் தாயிடம் கொடுத்து விடுவதாகவும் விரைவில் தான் வெளிநாடு ஒன்றுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுச் செல்ல ஆர்வம் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

இக்கா இளைஞர்கள் பிழையான வழிகளில் வழி தவறிச் செல்லும் இக்கால கட்டத்தில் தன் சுய உழைப்பின் மூலம் சொந்தக் காலில் வாழ்க்கை நடத்த முனைந்திருக்கும் வயதில் குறைந்த இந்த இளைஞனை பாராட்டாமல் இருக்க முடியாது.

நம் நாட்டு இளைஞர்களுக்கு இவர் ஒரு வழிகாட்டி அல்லவா?