செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பறக்கும் போதே விமானத்துக்கு எரிபொருள் நிரப்பலாம் - விஞ்ஞானிகள் சாதனை

Posted: 2015-04-02 02:46:45
பறக்கும் போதே விமானத்துக்கு எரிபொருள் நிரப்பலாம் - விஞ்ஞானிகள் சாதனை

பறக்கும் போதே விமானத்துக்கு எரிபொருள் நிரப்பலாம் - விஞ்ஞானிகள் சாதனை

கண்டம் விட்டு கண்டம் செல்லும் பயணிகள் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவே குறிப்பிட்ட விமான நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் நிரப்ப சில மணி நேரங்கள் கால விரயமும், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது.

இதனை தடுக்க ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு ஒன்று குருய்சர் எனேபிளைட் விமான போக்குவரத்து அமைப்பை கண்டுபிடித்துள்ளனர்.

இதன் மூலம், ஒரு விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும். அது குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

பயணிகள் விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும் போது எரிபொருள் தேவைக்கான அழைப்பை விடுக்கும். உடனே எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம், டேக் ஆப் செய்து பயணிகள் விமானத்துக்குக் கீழே பறக்கும்.

அதில் இருந்து பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட tank pump மூலம் பயணிகள் விமானத்துக்கு எரிபொருள் செல்லும். எரிபொருள் நிரம்பியதும் pump நிறுத்தப்பட்டு எரிபொருள் வழங்கும் விமானம் தரையிறங்கிவிடும்.

இந்த முறை ஏற்கனவே இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதுவரை பயணிகள் விமானத்தில் பயன்படுத்தப்பட்டதில்லை.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் சூரிச்சில் இருந்து சிட்னிக்கு எங்கும் தரையிறங்காமல் விமானம் செல்லும் என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளனர்.