செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய பெருவிழா

Posted: 2015-04-07 04:20:10
வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய பெருவிழா

வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய பெருவிழா

வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.

காலை, மாலை என இரு அமர்வுகளாக இடம்பெறும் இந் நிகழ்வில் நாட்டிய நடனம், கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம், கோலாட்டம், பிரதேச கலாசார நிகழ்வுகள் என பல வகையான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந் நிகழ்வின் போது ந.புவிகரனின் 'பள்ளிப் பட்டாம் பூச்சிகள்' என்னும் பாடலின் இறுவட்டு வெளியீடும் இடம்பெற்றது. பாடசாலை பருவத்தை மீட்டு பார்க்கும் வகையில் இப் பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிதேச கலைஞர்கள், பிரதே செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.