செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

புதுவருடத்தை முன்னிட்டு சித்தாண்டியில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

Posted: 2015-04-17 06:49:07
புதுவருடத்தை முன்னிட்டு சித்தாண்டியில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

புதுவருடத்தை முன்னிட்டு சித்தாண்டியில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

சித்திரைப் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மகிடிக்கூத்து, புலிக்கூத்து நிகழ்வுகள் ஏறாவூர்பற்று சித்தாண்டி பிரதேச மக்களினால் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

சித்தாண்டி உதயன்மூலை கிராம அபிவிருத்திச்சங்க வளாகத்தில் இவ் மகிடிக்கூத்து நடைபெற்றது.

சித்திரை வருட பிறப்பு என்றாலே ஊரெங்கும் கிராமிய விளையாட்டுக்கள், புலிக்கூத்து மற்றும் மகிடிக்கூத்து என்பன இடம்பெறும்.

அந்த வகையில் பாரம்பரிய முறையாகவும் ஒரு தெய்வீகப் போக்கையும் கொண்ட மகிடிக்கூத்து மற்றும் புலிக்கூத்து என்பனவும் இன்றை வரைக்கும் கிராமங்கள் தோறும் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் அதுவே தமிழர்களின் பாராம்பரிய புதுவருட பொழுதுபோக்கு நிகழ்வாகவும் அமைந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் சித்திரை புதுவருட தினத்துக்கு அடுத்துவரும் நாள்களில் கடந்த காலங்களிலிருந்து பாரம்பரியமாகவும் தெய்வீக ரீதியாகவும் புலிக்கூத்து மற்றும் மகிடிக்கூத்து என்பன ஆடுவது வழமையாக இருந்து வரும் அதேவேளை இம்முறையும் சித்தாண்டியின் நான்கு பிரிவுகளிலுள்ள மகிடிக்கூத்தாடும் கலைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட புலிக்கூத்து மற்றும் மகிடிக்கூத்து என்பன நடைபெற்றது.

மகிடிக்கூத்து நிகழ்வில் உடையார், விதானையார், காமாட்சி, மீனாட்சி, முனிவர்கள், குரத்தி குரவர் என பல்வேறுபட்ட காதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தினர். நடைபெற்ற மகிடிக்கூத்து நிகழ்வுக்கு சோதிநாதன் தலைமைதாங்கி வழி நடத்தியிருந்தார்.

மகிடிக்கூத்து தொடர்பாக அண்ணாவியார் கருத்து தெரிவிக்கையில் -

"சித்தாண்டி ஊரில் காலங்காலமாக எங்கள் பாட்டன் பூட்டனைத் தொடர்ந்து தற்பொழுது நாங்கள் இந்தப் புலிக்கூத்து மற்றும் மகிடிக்கூத்தை ஆடிவருகின்றோம்.

"அந்த வகையில் சித்திரை புதுவருடத்தை கடந்து மறு நாள்களில் இவ்வாறான நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுக்களை சித்தாண்டி ஊரில் தொடங்கிவிடுவம். காரணம் மக்களின் பொழுபோக்காக இவ்வாறான நிகழ்வுகள் அந்த காலம் தொடக்கம் இக்காலம் வரை இருப்பதால் இந்த நிகழ்வை நடத்துகிறோம். அதுமட்டுமின்றி வருசம் பிறந்து மறு நாள்களில் இவ்வாறான நிகழ்வுகளில் மத்தளம் அடிக்கும் போது கிராமத்திலுள்ள சிறு பிள்ளைகளுக்கு சிரங்கு மற்றும் சொறி என்பன பீடித்திருந்தால் அற்றுப்போயிடும் என்பனவும் மரபு. இந்த நிகழ்வுகள் ஒரு வகையில் தெய்வ பக்தி நிறைந்ததாகவும் இருக்கின்றன. "இந்த நிகழ்வை ஆரம்பிக்கும்போது நாங்கள் காவல் தெய்வங்களுக்கு கும்பம் வைத்து சிறு பூசை செய்து ஆரம்பித்த பிற்பாடு மகிடி ஆட்டம் ஆரம்பிக்கும். இதைப் பார்வையிட வருகின்ற சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்கள் என அனைவரும் நிகழ்வின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரைக்கும் சிரித்த வண்ணமே பார்வையிடுவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது - என்றார்.