செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

10 வயது பாலனைக் கழுத்தறுத்து கொன்றது யார்...? தொருடம் மர்மம் (இன்று அவனது பிறந்த நாள்)

Posted: 2015-04-21 01:15:07
10 வயது பாலனைக் கழுத்தறுத்து கொன்றது யார்...? தொருடம் மர்மம் (இன்று அவனது பிறந்த நாள்)

10 வயது பாலனைக் கழுத்தறுத்து கொன்றது யார்...? தொருடம் மர்மம் (இன்று அவனது பிறந்த நாள்)

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் தீவிரவாத அமைப்பு ஐ.எஸ்.ஐ. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. இந் நிலையில் அதே பாணியில் ஒன்றும் அறியாத பச்சிளம் பாலகனைக் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் இலங்கை முழுவதும் அதிர்ச்சியையும் ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 10 வயது நிரம்பிய இந்தப் பாலகனைக் கழுத்து அறுத்து கொலை செய்வற்கு யாருக்கு தான் மனம் வரும்...? இது என்ன கொடூரம் எனப் பலரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வவுனியா, நெளுக்குளம், சாம்பல் தோட்டத்தில் வசித்து வந்தது சந்திரசேகரன் குடும்பம். மூத்தவன் சுட்டித்தனம் மிக்க சஞ்சய். அவனுக்கு ஒரு தம்பி (வயது 6), ஒரு தங்கை. இந்தக் குடும்பத்தின் வாழ்க்கை அழகாக ஒடிக் கொண்டிருந்த வேளை கடந்த வருடம் கடைக்குட்டியான தங்கை மரணமடைந்தாள்.

அந்த சோகத்தில் இருந்து முழுக் குடும்பமும் மீளாத நிலையில் மீண்டும் அவர்கள் வாழ்க்கையில் விதி விளையாடியுள்ளது.

மூத்தவன் சஞ்சய் மிகவும் கொடூரமான முறையில் கடந்த 9 ஆம் திகதி பட்டப் பகலில் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளான்.

இம் மாதம் 21 ஆம் திகதி (அதவாது இன்றைய தினம்) தனது 10 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் அவனை அந்த குடும்பம் இன்று இழந்து தவிக்கின்றது.
"இந்த வருடம் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் எப்படியாவது சித்தி பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாக படித்து வந்த சஞ்சய் சுட்டித்தனமும் பேச்சாற்றலும் மிக்கவன்.

தாய், தந்தை என்ன சொன்னாலும் அதை ஓடிச் சென்று செய்வதில் வல்லவன். கடந்த 9 ஆம் திகதியும் வழமை போலவே மலர்ந்தது. புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பு அவனது பாடசாலையான நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய ஆரம்ப பாடசாலையில் நடந்தது.

காலையில் எழுந்து வழமை போன்று தனது வேலைகளை முடித்து விட்டு பாடசாலை சென்றான். அங்கு கற்றல் செயற்பாடுகள் முடிவடைந்ததும் பிற்பகல் 2.30 மணியளவில் வீடு வந்து சேர்ந்தான்.

பிற்பகலில் சஞ்சய்யின் தாய் இரண்டாவது மகனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சஞ்சய் வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சமயம் தாயின் தொலைபேசிக்கு உறவினர் ஒருவர் அழைப்பை ஏற்படுத்தியிருந்தார். அருகிலேயே தாய் சென்றிருந்ததால் ஓடிச் சென்று தாயிடம் தொலைபேசியைக் கொடுத்தான். தாய் கதைத்து முடிந்த பின் மீண்டும் தொலைபேசியுடன் வீட்டிற்கு வந்தான்.
மூன்றரை மணியளவில் தாய் வீட்டிற்கு வந்தார்.

சஞ்சய்... சஞ்சய்.. என கூப்பிட்டார். வீட்டில் சஞ்சய் இல்லை. வீடு அமைதியாகவே இருந்தது. தாய் தனது தொலைபேசியைப் பார்த்தார். அதனைக் காணவில்லை. அருகில் இருந்த உறவினரிடம் சஞ்சயைக் காணவில்லை, தொலைபேசியையும் காணவில்லை எனக் கூறி அவர்களின் தொலைபேசியை வாங்கி தனது தொலைபேசிக்கு அழைப்பை எடுத்தாள். அப்போது வீட்டின் பின் பகுதியில் உள்ள வேலிக்கு வெளியில் இருந்து தொலைபேசி கதறியது.

அங்கு ஓடிச் சென்று பார்த்த போது சஞ்சய் கழுத்து வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தான்" என்கிறார் அவனது பெரியப்பா.

அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் எல்லோரும் ஓடி வந்து சஞ்சயைத் தூக்கினார்கள். ஆனால் அவனது உயிர் கழுத்து அறுக்கப்பட்டதால் பிரிந்திருந்தது.

பொலிஸாருக்குத் தகவல் பறந்தது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை துருவி துருவி அக்கம் பக்கமெல்லாம் மேற்கொண்டார்கள்.
வீட்டின் சமையல் அறைக்கு அண்மையில் உள்ள கதவுக்கு வெளியில் முற்றத்தில் இரத்தக் கறைகள் இருந்தன.

அதன் பின்னர் விசாரணைகள் தொடர்ந்த நிலையில் மறு நாள் காலை வீட்டில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் இரத்தம் தோய்ந்த கத்தி ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனை அடிப்படையாக கொண்டு மோப்ப நாயின் துணையுடன் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வீட்டில் மரக்கறி வெட்டும் கத்தியாலேயே சஞ்சய் வெட்டப்பட்டுள்ளான் என அவனது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அந்தக் கத்தியே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

"பாடசாலையில் நன்றாக படிக்கக் கூடியவன் சஞ்சய். சொல்லும் எல்லா வேலைகளையும் செய்வான். விளையாட்டு, படிப்பு என இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் அவன் கெட்டிக்காரன். 2 மணி மட்டும் எங்களுடன் நின்றவன் வீடு சென்று ஒரு மணித்தியாலயத்திற்குள் இந்த செய்தியை கேட்டது எங்களால தாங்க முடியல. அவனது இழப்பு எமது பாடசாலை மற்றும் மாணவர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பே. இது போன்ற சம்பவம் இனிமேல் ஏற்படவே கூடாது" என கண்ணீர் விட்டு கூறுகிறார் அவனது ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி பிறேமா சிறீரஞ்சன்.
விசாரணைகள் தொடர்கின்றன. பலரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் சஞ்சைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை.

அண்ணன் இழப்பை தாங்க முடியாது தம்பி, தொடர்ச்சியான இழப்புக்களால் துவண்டு போயுள்ள அப்பா, ஆறு வயது பிள்ளையை மடியில் வைத்து கதறும் தாய், சுட்டிப் பேச்சுக்களால் சஞ்சயைக்காக ஏங்கும் உறவுகள் என சோகமயமானது அந்த ஊரே.

குற்றவாளி யார்..? ஏன் எதற்காக சஞ்சய் கொல்லப்பட்டான்..? ஒன்றும் அறியாத பாலகனின் கழுத்தை அறுக்கத் துணிந்த ஈனப்பிறவி யார்..? என்கிறார்கள் ஊரவர்கள்.

அண்மையில் காவத்தைப் பகுதியில் சந்தராணி சுவர்ணலதா என்ற மூன்று பிள்ளைகளின் தாய் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தாள். அந்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவளது 18 வயது மகனே கொலைக்கு காரணம் என சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். இந்த கொடுமையை மறப்பதற்கு முன்பே மீண்டும் ஒரு கொலை....? காரணம் யார்....?

-கே.வாசு-